search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபான பிரியர்களுக்கு புது உத்தரவு

    கடலூரில் பாதுகாப்பான முறையில் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு விடுத்துள்ள புதிய உத்தரவுக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
    கடலூர்:

    தமிழகத்தில் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிப்பிரியர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

    கூட்டம் கூடாமல் இருப்பதற்கு ஐந்து நபர்கள் என வரிசையில் வரக்கூடிய நபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடையில் வேலை செய்பவர்கள் முக கவசம் அணிந்து மதுபானங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.‌ இன்று நண்பகல் 12 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து தமிழக அரசு புதிய கெடுபிடி விதிக்கப்பட்டதால் குடி பிரியர்கள் காலை முதல் மதுபானம் வாங்குவதற்கு காத்திருந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை திறந்த உடன் குடிப்பீரியர்கள் 5 நபர்களாக முதலில் வரிசையில் நின்றனர். அனைவரும் முக கவசம் அணிந்து நின்று கொண்டிருந்தனர்.

    பின்னர் கடை விற்பனையாளர் முக கவசம் அணிந்து வரிசையில் நின்ற மது பிரியர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தனர். மேலும் நாளை போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானம் அதிக அளவில் விற்பனை நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது.

    மேலும் பாதுகாப்பான முறையில் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு விடுத்துள்ள புதிய உத்தரவுக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குடி பிரியர்கள் மதுபானம் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கியதை காண முடிந்தது.
    Next Story
    ×