search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறள்
    X
    திருக்குறள்

    கடலூர் கலெக்டர் ஆபீசில் பயிலரங்கம்- திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளுக்கு சான்றிதழ்

    ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரசேகரன், பெரியார் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ராசா, கடலூர் அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர். வெற்றிச் செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதி 2 நாட்கள் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றன. இப்பயிலரங்கில் ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அரசாணைகள், மொழி பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழி பயிற்சி, கணினிப் பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அந்தப் பயிற்சி வகுப்புகளில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரசேகரன், பெரியார் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ராசா, கடலூர் அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர். வெற்றிச் செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

    1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 5 மாணவிகளுக்கு 10,000 ஆயிரம் வீதம் காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றனர். மாவட்ட நிலையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அரசு இசைப்பள்ளிக்குக் கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசு பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றனர். இந்த 2 நாள் நிகழ்ச்சிகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
    Next Story
    ×