என் மலர்
கடலூர்
- முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் சைக்கிள் போட்டி 10 -ந்தேதி நடைபெறுகிறது.
- வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும்.
கடலூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 15- ந்தேதி பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு நடத்தப்படும் சைக்கிள் போட்டி வருகிற 10 -ந்தேதி காலை 7 மணிக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறும்.
வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரி யரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். இதற் கான நுழைவுப் படிவத்தி னை மாணவர்களுக்கு தனி யாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் கொண்டு வருதல் வேண்டும். போட்டி களில் கலந்து கொள்ள பய ணக்கட்ட ணம், தினப்படி வழங்கப்பட மாட்டாது. ஆனால் முதல் 10 இட ங்களில் வெற்றி பெறு வோருக்கு பரிசுகளும், சான்றி தழ்களும் வழங்கப்ப டும். போட்டிகளில் கலந்து கொள்வோர் சாதாரண சைக்கிள் தாங்களே கொண்டு வரு தல்வேண்டும். போட்டி களில் கலந்து கொள்வோர் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்னரே வருகை தந்து, போட்டி நடைபெறும் இடத்தில் உரிய சான்றுகளை வழங்கி, பதிவு எண் பெற்று, தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பா விதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப் பேற்க வேண்டும்.
இதற்கான எழுத்து மூல மான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலு வல ரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே மாணவ-மாணவி கள் மிகவும் பொறுப்பு டன் நடந்து கொள்ள வேண்டும். போட்டி யில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் பெயர்களை 9- ந்தேதி மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்க த்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பால சுப்ர மணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.
- திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33).
- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33). மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அமானுல்லா (53). இவர்கள் தங்களது மளிகைக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.
அதன்படி ஆவினங்குடி போலீசாரில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து போலீசாரின் பரிந்துரையின் பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 மளிகைக்கடை களுக்கும் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
- கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக்.
- நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் கோபிநாத் தம்பி கோகுல் என்பவரும் பஸ்சில் சென்று புதுப்பாளை யம் பகுதியில் இறங்கினர். அப்போது பஸ்சில் வந்த 2 பேருக்கும், அதே பகுதி யை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தன்று நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட4 பேர் திடீ ரென்று 2 பேரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு வீட்டின் எதிரில் தமிழ்ச்செல்வன் மற்றும் அருளை, நேதாஜி தரப்பினர் தாக்கி நாற்காலியை உடைத்த தாக கூறப்படுகிறது. இந்த கோஷ்டி தகராறில் நேதாஜி, கோபிநாதன், தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேதாஜி கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் 4 பேரும், தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நேதாஜி உள்ளிட்ட 4 பேர் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் அருகே குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
- 35 அட்டை பெட்டியில் 1680 மது பாட்டில்கள் இருந்தன.
கடலூர்:
கடலூர் அருகே குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை திறந்து பார்த்தபோது புதுவை மாநிலம் ஸ்டிக்கர் ஒட்டிய மது பாட்டில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டிய சுமார் 35 அட்டை பெட்டியில் 1680 மது பாட்டில்கள் இருந்தன.
இதனை தொடர்ந்து அங்கிருந்த 2 பேர் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடலூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் புதுவைப் பகுதியில் இயங்கி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து மது பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு போலியாக ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டப்பட்டு விற்பனை செய்வதற்கு பதுக்கப்பட்டு உள்ளதா? அல்லது புதுவை மாநிலத்திலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பார்களில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களில் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். மேலும் பிடிபட்ட 2 பேரும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சம்மட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 41), ஏழுமலை (48) என தெரியவந்தது. இவர்கள் தி.மு.க. பிரமுகர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட 2 பேர் உள்பட 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் பெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் 2012 ஆண்டு கோவில் மணிகள்திருடு போனது.
- வழக்கு விசாரணை திட்டக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கடலூர்:
திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவிலில் இருந்த கோவில் மணிகள்திருடு போனது. இதுகுறித்து மணி உள்ளிட்ட பேர் மீது திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை திட்டக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
அரசு தரப்பு சாட்சிகளை தொட்டி (வயது65), செங்க மலம் பூசாரி ஆகியோரை தங்களுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்ல சொல்லி யதாக அதை கிராம த்தைச் சேர்ந்த தன்ராஜ் (42), முருகானந்தம் (45) ஆகி யோர் மீது கோர்ட்டு உத்தர வின் பேரில் திட்டக்குடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ள னர்.
- பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா.
- அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரவிச்சந்திரன்(35). திருமணம் ஆகாதவர். இவர்நேற்றுமுன்தினம் இரவுஅங்கு செட்டி பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சை க்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட வாலிபர் ரவிச்சந்திரன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் ரவிச்சந்தி ரன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
- சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.
- ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற 9-ம் தேதி மகா அபிஷேகம் நடை பெற உள்ளது.
கடலூர்:
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். அதன்படி ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற 9-ம் தேதி மகா அபிஷேகம் நடை பெற உள்ளது. வருகிற 7-ந் தேதி காலை யில் கணபதி ஹோமம் அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜை, 8-ம் தேதி காலையில் நவகிரக ஹோமம், அன்று மாலை ஆசார்யவர்ணம், மது பர்க்கம் அங்குரம், பிரதிசரம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதன பூஜை ஆகியவை நடை பெறுகிறது. வருகிற 9-ந் தேதி காலை சுவாமிக்கு விசேஷ ரகசிய பூஜை, சுவாமிக்கு லஷார்ச்சனை கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் பின்னர் மகா தீபாராதனை நடைபெறுகிற.
துய நண்பகல் வஸோர்த் தாரை ஹோமம்ஆகிய வற்றைத் தொடர்ந்து மாலை மஹாபூர்ணாஹீதி, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை நடை பெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்தி மற்றும் சிவகாம சுந்தரிக்கு சகல த்ரவ்ய மஹாபிஷேகம் நடைபெறு கிறது. மகாபிஷேக ஏற்பாடு களை கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் வசித்து வந்த ஜெயபாலன், தனது மகனை பார்ப்பதற்காக குஜராத் சென்றார்.
- இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 73). இவர் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன் ரஞ்சித்குமார், குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் வசித்து வந்த ஜெயபாலன், தனது மகனை பார்ப்பதற்காக குஜராத் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். குஜராத்துக்கு சென்ற ஜெயபாலன் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனம் உள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்.எல்.சி. நிறு வனத்தில் 299 என்ஜினீயர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனம் உள்ளது. இங்கு மண்ணின் மைந்தர் மற்றும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பதை கண்டித்தும், என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலங்கள் வழங்கிய உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரியும் நெய்வேலி ஆர்ச்.கேட் அருகே கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை நெய்வேலி ஆர்ச் கேட்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வீடுகளை இழந்தும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உதவியிருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்.எல்.சி. நிறு வனத்தில் 299 என்ஜினீயர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் கூட தமிழர்கள்இல்லை. தமிழர்களின் உரிமையை பறிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை வண்மையாக கண்டிக்கிேறாம்.
இதே நிலை நீடித்தால் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு பூட்டு போடுவோம். தமிழர்களின் உரிமைகளுக்காக எனது உயிர் உள்ளவரை என்றும் பாடுபடுவேன். பா.ம.க. ஜாதி, மத பேதமின்றி ஒட்டு மொத்த தமிழர்களின் நலனுக்காக என்றென்றும் பாடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார்.
- கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மத்திய சிறைச்சாலை எதிரில் சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 28 ந்தேதி அதிகாலை வீட்டில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் பார்த்ததால் அனைவரும் தப்பித்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்
இந்த நிலையில் போலீசார் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 2000 செல்போன் எண்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதனை முழுமையாக சோதனை செய்து பார்த்ததில் சிறை வளாகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து சென்னை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பேசியது தெரிய வந்தது.
உடனே போலீசார் இதுபற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் சிறைக்காவலர் செந்தில்குமார் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர் யாரிடம் பேசி உள்ளார் என துப்புதுலக்கிய போது சிறைக்காவலர் செந்தில்குமார் 10-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் பேசியது அம்பலமானது. அவர் ரவுடிகளை ஏவி சிறை அதிகாரிகளை கொல்ல பேரம் பேசி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறை காவலர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சென்னையை சேர்ந்த வக்கீல் தினேஷ் என்பவர், சிறைக்காவலர் செந்தில்குமாருக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், சிறை காவலர் செந்தில்குமார் ரவுடிகள் மூலம் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சி, சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் செல்போன்கள் சிக்னலை வைத்தும் துப்பு துலக்கினர். அப்போது இந்த சம்பவத்தில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மதிவாணன் (வயது 27), மவுலிதரன் (27) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இன்று அதிகாலை 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான மதிவாணன் சென்னையை சேர்ந்த பிரபலரவுடி தனசேகரின் தம்பி ஆவார். கைதான 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பண்ருட்டி ஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது.
- அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டிஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தினுள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அங்கு இருந்த கொடி கம்பம், அறை கதவு, பூட்டு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். தகவல்அறிந்ததும்அங்கு விரைந்து சென்ற பஞ்சாயத்து தலைவர் முத்துலிங்கம், துணைத் தலைவர் ராமசாமி ஆகி யோர் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடு த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஊரா ட்சி அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்திய தெற்கு மேம்பாம்பட்டு கிராம த்தைச் சேர்ந்த 3 பேரை தேடி வருகிறார்கள்.
- வீட்டில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர்.
- மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மத்திய சிறைச்சாலை எதிரில் சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 28 ந்தேதி அதிகாலை வீட்டில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் பார்த்ததால் அனைவரும் தப்பித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகிய தலைமையில் அடிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்
இந்த நிலையில் போலீசார் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 2000 செல்போன் எண்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதனை முழுமையாக சோதனை செய்து பார்த்ததில் சிறை வளாகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து சென்னை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பேசியது தெரிய வந்தது. உடனே போலீசார் இதுபற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் சிறைக்காவலர் செந்தில்குமார் அடிக்கடி செல்ேபானில் ேபசி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர் யாரிடம் ேபசி உள்ளார் என துப்புதுலக்கிய போது சிறைக்காவலர் செந்தில்குமார் 10-க்கும் ேமற்பட்ட ரவுடிகளிடம் பேசியது அம்பலமானது. அவர் ரவுடிகளை ஏவி சிறை அதிகாரிகளை கொல்ல பேரம் பேசி உள்ளார்.
ஆனால் ரவுடிகள் என்கவுன்டருக்கு பயந்து செந்தில்குமாரின் திட்டத்துக்கு ஒத்து போகவில்லை. அதனை தொடர்ந்து தானே இந்த காரியத்தில் இறங்கி விடலாம் என கருதி சென்னையை சேர்ந்த வக்கீல் தினேஷ் என்பவரை அழைத்து உள்ளார். அவர் இதற்கு சம்மதித்த சென்று உள்ளார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் 2 பேரும் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான செந்தில் குமாருக்கு சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவடி தனசேகரன் என்பவருடன் தொடர்பு இருந்து உள்ளார். சிறையில் இருந்த ரவுடிகளுக்கு செல்போன் சப்ளை செய்ததாக சிறைஅதிகாரி மண்கண்டனால் காவலர் செந்தில்குமார் சஸ்பெண்டு ஆகி இருந்தார். இந்த முன்விரோதத்தில் செந்தில்குமார் சிறைஅதிகாரியை கொல்வதற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.






