search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hoard 1"

    • கடலூர் அருகே குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
    • 35 அட்டை பெட்டியில் 1680 மது பாட்டில்கள் இருந்தன.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை திறந்து பார்த்தபோது புதுவை மாநிலம் ஸ்டிக்கர் ஒட்டிய மது பாட்டில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டிய சுமார் 35 அட்டை பெட்டியில் 1680 மது பாட்டில்கள் இருந்தன.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த 2 பேர் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடலூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் புதுவைப் பகுதியில் இயங்கி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து மது பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு போலியாக ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டப்பட்டு விற்பனை செய்வதற்கு பதுக்கப்பட்டு உள்ளதா? அல்லது புதுவை மாநிலத்திலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பார்களில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களில் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். மேலும் பிடிபட்ட 2 பேரும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சம்மட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 41), ஏழுமலை (48) என தெரியவந்தது. இவர்கள் தி.மு.க. பிரமுகர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட 2 பேர் உள்பட 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் பெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×