திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா.அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.
தற்கொலை செய்த ரவிச்சந்திரன்.
தற்கொலை செய்த ரவிச்சந்திரன்.
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரவிச்சந்திரன்(35). திருமணம் ஆகாதவர். இவர்நேற்றுமுன்தினம் இரவுஅங்கு செட்டி பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சை க்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட வாலிபர் ரவிச்சந்திரன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் ரவிச்சந்தி ரன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com