என் மலர்
நீங்கள் தேடியது "கிடுக்கிப்பிடி விசாரணை"
- வீட்டில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர்.
- மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மத்திய சிறைச்சாலை எதிரில் சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 28 ந்தேதி அதிகாலை வீட்டில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் பார்த்ததால் அனைவரும் தப்பித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகிய தலைமையில் அடிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்
இந்த நிலையில் போலீசார் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 2000 செல்போன் எண்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதனை முழுமையாக சோதனை செய்து பார்த்ததில் சிறை வளாகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து சென்னை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பேசியது தெரிய வந்தது. உடனே போலீசார் இதுபற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் சிறைக்காவலர் செந்தில்குமார் அடிக்கடி செல்ேபானில் ேபசி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர் யாரிடம் ேபசி உள்ளார் என துப்புதுலக்கிய போது சிறைக்காவலர் செந்தில்குமார் 10-க்கும் ேமற்பட்ட ரவுடிகளிடம் பேசியது அம்பலமானது. அவர் ரவுடிகளை ஏவி சிறை அதிகாரிகளை கொல்ல பேரம் பேசி உள்ளார்.
ஆனால் ரவுடிகள் என்கவுன்டருக்கு பயந்து செந்தில்குமாரின் திட்டத்துக்கு ஒத்து போகவில்லை. அதனை தொடர்ந்து தானே இந்த காரியத்தில் இறங்கி விடலாம் என கருதி சென்னையை சேர்ந்த வக்கீல் தினேஷ் என்பவரை அழைத்து உள்ளார். அவர் இதற்கு சம்மதித்த சென்று உள்ளார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் 2 பேரும் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான செந்தில் குமாருக்கு சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவடி தனசேகரன் என்பவருடன் தொடர்பு இருந்து உள்ளார். சிறையில் இருந்த ரவுடிகளுக்கு செல்போன் சப்ளை செய்ததாக சிறைஅதிகாரி மண்கண்டனால் காவலர் செந்தில்குமார் சஸ்பெண்டு ஆகி இருந்தார். இந்த முன்விரோதத்தில் செந்தில்குமார் சிறைஅதிகாரியை கொல்வதற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.






