என் மலர்

  நீங்கள் தேடியது "unmarried"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணியரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
  • புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.

  கடலூர்:

  பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 29)திருமணம் ஆகாதவர். மணி யரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மனவேதனையில் இருந்த புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது சித்தப்பா பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர் தங்க வேல்ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தீவிர மாக தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா.
  • அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.

  கடலூர்:

  பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரவிச்சந்திரன்(35). திருமணம் ஆகாதவர். இவர்நேற்றுமுன்தினம் இரவுஅங்கு செட்டி பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சை க்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட வாலிபர் ரவிச்சந்திரன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

  பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் ரவிச்சந்தி ரன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோபி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கோபி:

  கோபி அருகே உள்ள தாளக்கொம்பு புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது மகன் குணசேகரன் (40). விவசாயி. இவர்கள் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று காலை வீடு திறக்கப்படவில்லை.

  இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.

  எனவே வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது லட்சுமியும், குணசேகரனும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

  இதையடுத்து பிணங்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கோபி போலீசார் விசாரணை நடத்தினர்.

  அப்போது குணசேகரனுக்கு திருமணம் ஆகாததால் தாயும், மகனும் விரக்தியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  ×