பண்ருட்டியில் திருமணம் ஆகாத வேதனையால் இளம் பெண் மாயம்

மணியரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.
பண்ருட்டியில் திருமணம் ஆகாத வேதனையால் இளம் பெண் மாயம்
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 29)திருமணம் ஆகாதவர். மணி யரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மனவேதனையில் இருந்த புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது சித்தப்பா பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர் தங்க வேல்ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தீவிர மாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com