என் மலர்
கோயம்புத்தூர்
- சில கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
- வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.
சூலூர்,
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஜெ.கிருஷ்ணாபுரம், தாளகரை, கரையாம் பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
அறுவடைக்கு சில மாதங்களே இருந்த நிலையில் மரங்கள் சரிந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் தோட்டங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்து கிடந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டார். அப்போது கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து கலெக்டர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:-
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழு நிவாரண தொகையும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்யும்.காப்பீடு செய்யாத பயிர்களுக்கும் அரசிடம் எடுத்துரைத்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை செய்யப்படும் .
விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் தேவைப்பட்டால் உரிய அனுமதியுடன் குளங்களில் எடுத்துக் கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் 35 குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது என்றார்.கலெக்டர் ஆய்வு நிகழ்ச்சியில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமியும் பங்கேற்றார். அவர் கூறுகையில் இந்தாண்டு அதிக அளவில் வாழையை விவசாயிகள் பயிர் செய்து இருக்கிறார்கள்.
விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு இந்த வாழைகள் வளர்ந்து உள்ள நிலையில் நேற்று முன்தினம் அடித்த சூறாவளி காற்றினால் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட வாழைகள் பாதிப்புக்கு உள்ளாகி விற்பனை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு உரிய விலை வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
உடனடியாக மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
- மூதாட்டி 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.
- இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலாம்பூர்,
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பொன்கிஆத்தால் (வயது72). சம்பவத்தன்று இவர் அவரது அக்கா வீட்டுக்கு சென்று விட்டு சேலம்-கொச்சின் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத கார் இவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் பொன்கிஆத்தாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொன்கி ஆத்தால் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்ப டுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார்.
- என்ஜினீயர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் யாரோ மர்மநபர் ஒருவர் பெண் என்ஜினீயரின் புகைப்படத்தை வைத்து போலியாக அவரது பெயரில் இன்ஸ்டாகிரம் பக்கத்தை தொடங்கினார். பின்னர் அந்த பக்கத்தின் மூலம் பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை பார்த்த இளம்பெண்ணின் நண்பர்கள் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் என்ஜினீயர் இது குறித்து உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர் பெயரில் அவரது புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி மெசேஜ் அனுப்பி வந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
- குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான பாலாஜி, நிசாந்த், செல்வராஜ் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு சென்றார்.
அங்கு வைத்து 4 பேரும் மது குடித்தனர். பின்னர் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் மெட்டூர் கார்மல் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் குமாரை மிரட்டி தகராறு செய்தனர். இது குறித்து அவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் ஒரு காரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். தாக்குதலில் செல்வராஜ் என்பவருக்கு கையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட போத்தனூர் அன்பு நகரை சேர்ந்த அந்ேதாணி ராஜசேகர், தூத்துக்குடியை சேர்ந்த விஜய் (26), புதுக்கோட்டையை சேர்ந்த அந்ேதாணி ஜோசப் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தருவதை கடமையாக செய்து வருகிறார்.
- மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன்.
கோவை:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது79). இவர் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார்.
யாசகம் பெறும் பணத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணத்தை வழங்குவதையும், கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தருவதை கடமையாக செய்து வருகிறார்.
இந்நிலையில் யாசகரான பூல்பாண்டியன் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்து யாசகர் பாண்டியனை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பாராட்டினார். இது குறித்து யாசகரான பாண்டியன் கூறியதாவது:-
மும்பை செம்பூரில் வசித்து வந்த நான் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, யாசகம் பெற்று பிழைப்பு நடத்த தொடங்கினேன். இந்த யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இதனை எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உபகரணங்கள் வாங்கிக்கொள்ள நிதி உதவியாக அளித்தேன். இதுவரை 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளேன். மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன். இதில் தான் எனக்கு பெரும் நிம்மதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
- 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வால்பாறை,
வால்பாறை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது.
இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கண்காணிப்பு காமிராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார்.
- 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடினர்.
கோவை,
கோவை அன்னூர் அருகே திப்புநாயக்கன்பாளையத்ததை சேர்ந்தவர் மூர்த்தி(47). விவசாயி. இவர் தனது தோட்டத்து அறையில் பழுது பார்பதற்காக 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடுவதை பார்த்த அவர் சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 வாலிபர்களையும் விரட்டி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் அன்னூர் வடக்கலூரை சேர்ந்த அருள்பிரகாஷ்(33), ஜீவானந்தம் (33), சின்னதுரை(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட தயாராக இருந்தது.
- 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
கோவை,
கோவை ரெயில் நிலையத்தில் கடந்த 18-ந் தேதி 5-வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில் முன்பு படுத்துக்கொண்டார். பின்னர் ரெயில் புறப்பட்டபோது ரெயிலில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட மசோதா நகல்களை எரித்தனர்.
- பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கோவை,
தமிழகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த சட்ட மசோதா நகல்களை எரித்தும். தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும் கண்டனத்தை பதிவு செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நகல் எரிப்பை தடுக்க முற்பட்டதால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
- மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்க ப்பட்டு வருவதாக சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. கொரோ னா தொற்று கர்ப்பிணிகள், இணை நோய் பாதிப்புள்ள வர்கள், முதியவர்களை எளிதில் பாதிக்கிறது.
இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் கிராம செவிலி யர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.இது குறித்து சுகாதா ரத்துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக கிராம செவிலியர்களுக்கு தகவல் அளிக்க கர்ப்பிணி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.இது போன்ற லேசான அறிகுறிகள் இருக்கும் காப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பரிசோ தனைகள் மேற்கொ ண்டு உரிய சிகிச்சை கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதுவரை கர்ப்பிணி களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை. இருப்பினும், எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சரண்குமார் கூலி தொழிலாளியாக உள்ளார்.
- சரண்குமார் அரிவாளால் பிரேம்குமாரை வெட்டினார்.
கோவை,
கோவை ஏரிபட்டி மரம்புடுங்கி கவுண்டனூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது23). டிரைவர். இவரது உறவினர் சரண்குமார்(21). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சரன்குமார் பிரேம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சரண்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேம்குமாரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து சரண்கு மாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
- மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது.
இதன் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, சின்ேகானா, சின்னக்கல்லாறு, வால்பாறை பி.ஏ.பி., மாக்கினாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பொள்ளாச்சி தன்னிச்சி யப்பன் கோவில் வீதியில் ஒரு வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.
அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
மேலும் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக மரப்பேட்டை நடுநிலை ப்பள்ளியில் தங்க வைக்க ப்பட்டனர்.
இதே போல சின்னியம்பாளையம் பகுதியில் மழை காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்.எம். நகர் வீதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
மேலும் மழையின் காரணமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 308.90 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதிகபட்சமாக மாக்கினாம்பட்டியில் 91 மி.மீட்டர், பொள்ளாச்சியில் 68 மி.மீட்டர், வால்பாறை பி.ஏ.பி.யில் 43 மி.மீ, வால்பாறை தாலுகா 42 மி.மீ., சின்கோனா 23.மி.மீ., சின்னக்கல்லாறு 22 மி.மீ., ஆழியாறு 7.60 மி.மீ., ஆனைமலை தாலுகா 5.30 மி.மீ., கிணத்துக்கடவு 5மி.மீ., சேலையாறு 2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது. திடீரென கோவை மழை பெய்து குளிர்வி த்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.






