வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்- 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்- 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்
Published on

வால்பாறை,

வால்பாறை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது.

இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கண்காணிப்பு காமிராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com