என் மலர்
செங்கல்பட்டு
- இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்த நகர், அப்பாவு நகர். அம்பத்தூர்- ஜெ.ஜெ.நகர் 10, 11, 12-வது பிளாக் முகப்பேறு கிழக்கு.
- ஜெயந்தி காலனி, போலீஸ் ஏசி குடியிருப்பு, 100 படுக்கை மருத்துவமனை, ராயல் என்க்ளேவ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்- பம்மல் திரு நகர், ஞானமணி நகர், ராஜேஸ்வரி நகர், பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு, ராகவேந்திரா நகர் மெயின் ரோடு, போரூர்- டெம்பிள் வேவ் அமர்பிரகாஷ், குமரன் நகர், பி.கே.வி.மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர் மாங்காடு- ஜனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்த நகர், அப்பாவு நகர். அம்பத்தூர்- ஜெ.ஜெ.நகர் 10, 11, 12-வது பிளாக் முகப்பேறு கிழக்கு.
கே.கே.நகர்- ஆழ்வார்திருநகர் ஆர்.கே.நகர் மெயின் ரோடு ஒரு பகுதி, பாரதியார் தெரு, சிண்டிகேட் காலனி, திருமலை நகர் கோடம்பாக்கம்- சங்கராபுரம் 2, 3, 4-வது தெரு, பாஷா தெரு, அமீர் ஜான் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தண்டையார்பேட்டை - அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், கே.ஆர்.பாளையம், தமிழ்குறஞ்சியூர், கரையான்மேடு.
9-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்- சிட்லபாக்கம் பாம்பன்சாமிகள் சாலை முழுவதும், பாரத் அவென்யூ, எஸ்.பி.ஐ.காலனி ஒரு பகுதி, சுதா அவென்யூ, வீரவாஞ்சி தெரு, ஆதிநாத் அவென்யூ, பாலாஜி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி ஐ.ஏ.எப் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, மோகன் தெரு, வியாசர் தெரு, காந்தி நகர், கற்பகவிநாயகர் தெரு, எழும்பூர்- கீழ்பாக்கம் கே.எம்.சி.மருத்துவமனை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், கெல்லீஸ் சந்து, மில்லர்ஸ் ரோடு, செகரியேட் காலனி, பால்பர் ரோடு, ஆம்ஸ் ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, மேடவாக்கம் தொட்டி சாலை, அயனாவரம், டைலர்ஸ் ரோடு, அகஸ்தியா நகர், புதிய ஆவடி ரோடு, மண்டபம் ரோடு, போரூர்- வயர் லெஸ் ஸ்டேசன் ரோடு, ஜெயா பாரதி நகர், குருசாமி நகர், ராமசாமி நகர், திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, சரண்யா நகர், ஷர்மா நகர், மங்களாபுரி நகர் 1-வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, வழுதலம்பேடு, கிருஷ்ணா நகர், பெருமாள் நகர், சம்பந்தம் நகர், தாய் சுந்தரம் நகர், மெட்ரோ கிராண்ட் சிட்டி ஐய்யப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சந்திரா நகர், ஜாஸ்மின் கோர்ட், டி.ஆர்.ஆர் நகர். அண்ணா நகர் - பி பிளாக் முதல் இசட் பிளாக் வரை, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, ஜெயந்தி காலனி, போலீஸ் ஏசி குடியிருப்பு, 100 படுக்கை மருத்துவமனை, ராயல் என்க்ளேவ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது.
- மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள்.
மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது. இதில் பல சிற்ப கூடங்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக கற்களை சாலை ஓரம் மற்றும் வீதிகளில் போட்டு அறுத்து வருகிறார்கள். இதனால் தூசு பறந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சர்வதேச விளையாட்டு போட்டிகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா பகுதியாக மாறி வருகிறது.
இதைத்தொடர்ந்து சிற்பக்கூடங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் பங்களிப்புடன் சிற்ப பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது.
கைவினைத் தொழில் மேம்பாடு, சிற்பக்கூடங்கள் ஒழுங்குமுறை கருதி சிட்கோ நிறுவனம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் "சிட்கோ" சிற்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்து உள்ளது. இது 19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் அமைய உள்ளது.இதற்கான முதல்கட்ட பணியாக நில அளவை தொடங்கி நடந்து வருகிறது. சிற்பபூங்கா அமைய உள்ளதால் மாமல்லபுரம் சிற்பக்கலை சிற்பிகள், ஸ்தபதிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- உணவு சாப்பிட்டு முடிந்து சிறை கைதிகள் தங்களது அறைக்கு திரும்பினர்.
- கைதி ரகு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் ரகு (48). இவர் கடந்த 1-ந்தேதி பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டில் அமைந்துள்ள சிறையில் அடைத்தனர். இவருடன் 5 பேர் சிறை அறையில் இருந்தனர்.
நேற்று மாலை இரவு உணவிற்கு சிறையில் உள்ள அனைவரும் சென்றிருந்த நேரம் ரகு தான் தங்கி இருந்த சிறை அறைக்கு சென்று தனது போர்வையில் அறையில் உள்ள வெண்டிலேட்டரில் ஒரு முனையைகட்டி விட்டு மறுமுனையில் கழுத்தில் இறுக்கியபடி தூக்கில் தொங்கினார். உணவு சாப்பிட்டு முடிந்து சிறை கைதிகள் தங்களது அறைக்கு திரும்பினர். அப்போது கைதி ரகு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறை காவலர்களிடம் தெரிவித்தனர். பணியில் இருந்த காவலர் யுவராஜ், குணா சிறை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் செவிலியர் விஜயராஜ் ஆகியோர் தூக்கில் தொங்கிய ரகுவை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தாம்பரம்:
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மேற்கு தாம்பரம், டி.டி.கே.நகர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.
மண்டல குழு தலைவர் டி.காமராஜ் அனைவரையும் வரவேற்றார்.
கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முன்னதாக கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தாம்பரம் மாநகர தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதியாக 5 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம் சிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணைமேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூண்டுக்கு வெளியே சுற்றி திரியும் 2 புலிகளும் பெண் ஊழியரின் அன்பு கட்டளையை ஏற்று கூண்டுக்குள் செல்கின்றன.
- புலிகளை பெண் ஊழியர் ஒருவர் புலிகளின் பெயரை சொல்லி தேவா, மாலா என்று அழைக்கிறார்.
வண்டலூர்:
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் கோடை வெயிலை சமாளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இங்குள்ள பறவைகளுக்கு நீர்ச்சத்து உள்ள பழங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பறவைகள் உள்ள கூண்டுகளை சுற்றி சணல் கோணி மூலம் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த கோணிகளில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது. இதனால் கூண்டுக்குள் எப்போதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கூண்டுகளின் மேல் தென்னை, பனை ஓலைகளும் போடப்பட்டு உள்ளன.
மேலும் விலங்குகள் குளிக்கும் இடத்தில் செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வழக்கத்தை விட அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. யானை உள்ளிட்ட விலங்குகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஷவர்களில் குளியல் போடுகின்றன. குளியல் போட்டபடியே கரும்புகளை கடித்து சுவைக்கின்றன.
சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு குளிர் சாதன பெட்டியில் வைக்கப் பட்ட இறைச்சி ஜில்லென வழங்கப்படுகிறது. மேலும் இங்குள்ள விலங்குகள் கோடையில் பாதுகாப்பாக இருக்க 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கால்நடை மருத்துவர்கள் கண்காணிக்கிறார்கள்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவா, மாலா ஆகிய 2 புலிகள் உள்ளன. இந்த புலிகள் கூண்டுக்குள்ளேயும், கூண்டுக்கு வெளியேயும் திரிகிறது. கூண்டுக்கு வெளியே சுற்றி திரியும் 2 புலிகளும் பெண் ஊழியரின் அன்பு கட்டளையை ஏற்று கூண்டுக்குள் செல்கின்றன.
கூண்டுக்கு வெளியே இருக்கும் புலிகளை பெண் ஊழியர் ஒருவர் புலிகளின் பெயரை சொல்லி தேவா, மாலா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் அந்த புலிகள் அவரை திரும்பி பார்க்கின்றன. பின்னர் புலிகளை பார்த்து கூண்டுக்குள் போ என்று பெண் ஊழியர் சொல்கிறார். உடனே 2 புலிகளும் எழுந்து நட ந்து வந்து கூண்டுக்குள் செல்கின்றன. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடகாவில் இருந்து சிங்கம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சிங்கத்தை 2 நாட்கள் கழித்து பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கூலி வேலை செய்து வரும் அருண்குமார் தினந்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
- மனமுடைந்த அருண்குமார் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோர்வுடன் காணப்பட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் அருண்குமார் தினந்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கிட்னி செயல் இழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அருண்குமார் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோர்வுடன் காணப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாலூர் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது.
- நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது.
அச்சரப்பாக்கம் :
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் த.வெள்ளையன் கூறியதாவது:-
நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது. இதன்மூலம் நமது வணிகத்தை உயிரோடு குழிதோண்டி புதைத்து வருகிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நம் நாட்டு தயாரிப்புகளை பார்த்து வாங்கி அதை வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும்.
அந்நிய தயாரிப்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது. நம் நாட்டு தயாரிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். அந்நிய தயாரிப்புகளை விரட்டி அடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு வணிகர் சங்க பேரவை தொடர்ந்து போராடும்.
எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது அரிசிக்கும் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி ஒழியும் வரை நாம் போராட வேண்டும்.
எதற்காகவும் சிறைக்கு செல்லவும் தயாராக வேண்டும். இதன் முதல் கட்டமாக மதுரையில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஐ.டி.ஐ மாணவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இந்தப் பயிற்சிக்கு வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் ஐ.டி.ஐ., தேர்வு பெற்ற கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கார்பென்டர், சிவில் டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரீசியன், டர்னர், பிளம்பர், வெல்டர் உள்ளிட்ட ஐ.டி.ஐ பிரிவு தொழில்களில் 96 பேருக்கு இலவச தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களை www.npcil.nic.in என்ற இணையத்தில் பார்த்து பதிவுசெய்ய அணுமின் நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மர்மநபர்கள் இந்தக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் மதுபாட்டில்களை திருடியதாக திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது 24), வெங்கடாபுரம் பகுதியைச்சேர்ந்த ஆகாஷ் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- செய்யூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு உள்ளது.
- இந்திய மக்கள் அனைவரும் உழைப்பு மற்றும் நிதி ஆதாரத்தையும் அளியுங்கள்.
மதுராந்தகம்:
செய்யூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் அகண்ட பாரதம் என்ற நூலை வெளியிட்டார். பின்னர் மோகன் பகவத் பேசியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கி 98 ஆண்டுகள் ஆகிறது. இந்த இயக்கம் அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.
அகண்ட பாரதத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக இந்திய மக்கள் அனைவரும் உழைப்பு மற்றும் நிதி ஆதாரத்தையும் அளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று மாலை 4 மணியளவில் ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் பங்கேற்கிறார்.
- மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர்.
- செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5 வணிகர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று ஈரோட்டில் வணிகர் சங்கம் சார்பில் 40-வது வணிகர் தின மாநாடு நடைபெற்று வருகிறது.
இதையொட்டி செங்கல்பட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் செங்கல்பட்டில் இருந்து ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர். கடை தொழிலாளர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.
குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய ஜி.எஸ்.டி. சாலை, மணிகூண்டு, காய்கறி மார்கெட், சின்ன மணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு, ராஜாஜி தெரு, உள்ளிட்ட தெருக்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் வணிகர் தினத்தை கொண்டாடும் விதமாக மூடப்பட் டுள்ளது. இதனால் செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
- வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
- மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021-2022 ம் ஆண்டில் வண்டலூர் பூங்காவில் வனப்பகுதியில் திறந்த வெளியில் விடப்பட்டு உள்ள சிங்கங்களை அதன் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்று பார்க்கும் சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் நோய் தொற்று குறைந்ததும் பூங்காவில் மூடப்பட்டு இருந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், இரவு நேர விலங்குகள் என ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால் சிங்கம் சபாரி மட்டும் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் இதனை சோதனை முறையில் தொடங்க பூங்கா அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இந்த ஆண்டு விலங்குகள் பரிமாற்றத்தில் 2 சிங்கங்கள் வந்து உள்ளன. வண்டலூர் பூங்காவில் தற்போது மொத்தம் 10 சிங்கங்கள் உள்ளன. இவற்றில் 3 சிங்களங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றுக்கு முறையான பயிற்சி, மற்றும் உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கங்களின் இருப்பிடத்திற்கு வாகனங்கள் செல்லும்போது பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான வாகனங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் சிங்கம் சபாரி பயன் பாட்டுக்கு வரும் என்றார்.






