என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு ஜெயிலில் போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி
- உணவு சாப்பிட்டு முடிந்து சிறை கைதிகள் தங்களது அறைக்கு திரும்பினர்.
- கைதி ரகு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் ரகு (48). இவர் கடந்த 1-ந்தேதி பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டில் அமைந்துள்ள சிறையில் அடைத்தனர். இவருடன் 5 பேர் சிறை அறையில் இருந்தனர்.
நேற்று மாலை இரவு உணவிற்கு சிறையில் உள்ள அனைவரும் சென்றிருந்த நேரம் ரகு தான் தங்கி இருந்த சிறை அறைக்கு சென்று தனது போர்வையில் அறையில் உள்ள வெண்டிலேட்டரில் ஒரு முனையைகட்டி விட்டு மறுமுனையில் கழுத்தில் இறுக்கியபடி தூக்கில் தொங்கினார். உணவு சாப்பிட்டு முடிந்து சிறை கைதிகள் தங்களது அறைக்கு திரும்பினர். அப்போது கைதி ரகு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறை காவலர்களிடம் தெரிவித்தனர். பணியில் இருந்த காவலர் யுவராஜ், குணா சிறை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் செவிலியர் விஜயராஜ் ஆகியோர் தூக்கில் தொங்கிய ரகுவை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






