என் மலர்
செங்கல்பட்டு
- ரூ.54 லட்சத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
- செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவர் அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரிடம் சீட்டு போட்டு ரூ. 67 லட்சம் செலுத்தி உள்ளார். அதில் ரூ.13 லட்சத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் திரும்ப பெற்றுள்ளார். மீதமுள்ள ரூ.54 லட்சத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் கேசவன் மீதமுள்ள பணத்தை பெற்று தருமாறும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழக சுற்றுலாத்துறை, மத்திய தொல்லியல்துறை சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை அனுமதிக்கவில்லை.
மாமல்லபுரம்:
"ஜி-20" மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 34 வெளிநாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மொத்தம் 107பேர், 4சொகுசு பஸ்களில் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரம் வந்தனர். தமிழக சுற்றுலாத்துறை, மத்திய தொல்லியல்துறை சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட உள்ள பகுதிகள், பாதுகாப்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி ஏற்பாடு பகுதிகளை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகளுக்கு மாலை 5மணியில் இருந்து கடற்கரை கோவில், அர்சுன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை அனுமதிக்கவில்லை.
- சர்வதேச சுற்றுலா தினமான செப்டம்பர் 27ல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
- சுற்றுலா ஏற்பாட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாமல்லபுரம்:
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சர்வதேச சுற்றுலா தினமான செப்டம்பர் 27ல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இதில் சுற்றுலா ஏற்பாட்டாளர், உணவகம், தங்கும் விடுதி, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஊழியர், வழிகாட்டி, சாகச சுற்றுலா நடத்துவோர், சமூக ஊடகவியலாளர், சிறந்த சுற்றுலா விளம்பரம், சிறந்த விளம்பர கருத்து, சுற்றுலா சார்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
- மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வருகிறார்கள்.
- உத்தண்டி டோல்கேட்டில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையில் நேற்று முன்தினம் "ஜி-20" நாடுகள் அமைப்பின் பேரிடர் அபாய குறைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பணிக்குழு மாநாடு துவங்கியது. அது இன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து மாநாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுச்சூழல், பேரிடர் துறைகளின் அமைச்சர், பிரதிநிதிகள் இன்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வருகிறார்கள்.
இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் வகையில், இ.சி.ஆர் உத்தண்டி டோல்கேட்டில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தமிழ் பாரம்பரிய வேட்டி கட்டிய வழிகாட்டிகள், கடற்கரை கோயில் வளாகத்தில் தமிழக பாரம்பரிய கரகாட்டம், தப்பாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரதிநிதிகளுக்கு தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது. பிரதிநிதிகள் திடீரென ஓய்வெடுக்க, கழிப்பறை செல்ல வசதியாக "கேரவன்" வாகனங்கள் கடற்கரை கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், ஆணையர் அழகுமீனா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான அனுமதி கேட்டு மன்ற பொருள் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அ.தி.மு.க.கவுன் சிலர்கள் 9 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் மக்களின் குறைகள் எதுவும் பேசாமல் ரியல் எஸ்டேட்டுக்காக தி.மு.க. உறுப்பினர்கள் மன்றத்தை நடத்த விடாமல் செய்வதாகவும், மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
- ஆலப்புழா பகுதியில் மூங்கில்களால் தயாரித்து, வடிவமைக்கப்பட்ட 15 யானை சிலைகள் லாரி மூலம் கேரளாவில் இருந்து மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.
- யானை சிலைகள் தற்போது கடற்கரைகோவில் புல்வெளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள் பல்வேறு குழுக்களாக மாமல்லபுரம் வருகின்றனர். அதேபோல் வட மாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். இந்த நிலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள யானை கற்சிற்பத்தை நினைவு படுத்தும் வகையில் கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் மூங்கில்களால் தயாரித்து, வடிவமைக்கப்பட்ட 15 யானை சிலைகள் லாரி மூலம் கேரளாவில் இருந்து மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.
அந்த யானை சிலைகள் தற்போது கடற்கரைகோவில் புல்வெளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குட்டி யானை முதல் பெரிய யானை வரை நிஜ யானைகள் கூட்டம், கூட்டமாக புல்வெளியில் மேய்வது போன்று தத்ரூபமாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை கோவில் வளாகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் அசல் யானை போல் உள்ள மூங்கில் யானை சிலைகளின் அருகில் வந்து அதன் அழகை ரசித்து பார்த்து அவற்றின் முன்பு நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு பயணிகள் பலர் அசல் யானையே என்று அதன் அருகில் வந்து பார்த்து ஏமாந்து சென்றதையும் காண முடிந்தது.
- தமிழகத்தில் உள்ள ஏழு முக்கிய மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு பயணம்.
- ஆகஸ்ட் 14ம் தேதிவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், அறிவியல் சங்கம், அறிவியல் பாரதீய சங்கம், தேசிய அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவை ஒருங்கிணைந்து ஆண்டு தோறும் அணு அறிவியல் விழிப்புணர்வு பயணம் நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு பயண வாகனத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவி, அணுஉலை செயல் விளக்க எலக்ட்ரானிக் வரைபடம், இயற்கை வளம், விவசாயம், மீன்பிடி குறித்து புகைப்படங்கள், அணுவின் மாதிரி உருளை, உள்ளிட்ட அறிவியல் சாதனங்களுடன் "நாட்டின் சேவையில் அணுக்கள்" என்ற தலைப்பில், பிரத்யேக விழிப்புணர்வு கண்காட்சி வாகனம், தமிழகத்தில் உள்ள ஏழு முக்கிய மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு பயணம் சென்று ஆகஸ்ட் 14ம் தேதிவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
துவக்க நிகழ்ச்சியில் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜித்குமார் மொகந்தி, அருங்காட்சியகம் இயக்குனர் சாதனா, கதிரியக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழும இயக்குனர் வித்யா சுந்தர்ராஜன், தலைவர் சுப்பிரமணியன், செயலர் கோபால்சாரதி, தொழில்நுட்ப விழிப்புணர்வு பிரிவு தலைவர் ஜலஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார்.
சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார்.
அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
- தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது?
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் அட்டைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 5 மாதங்களாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையை சுற்றிலும் மற்றும் பின்புறத்திலும் ஏராளமான முட்புதர்கள் இருந்தன.
இதனை அகற்றும் பணியில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சீனு, தினேஷ் உள்ளிட்ட 4 தொழி லாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிலாளர்கள் சீனு, தினேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். போலீசாரின் தீவிர சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்து மேலும் 2 வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை வாளியில் வைத்து பத்திரமாக போலீசார் எடுத்து சென்ற னர். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது? யார் இதை இங்கு வைத்தது? ரவுடி கும்பல் இதனை இங்கு பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ரவுடிகள் 2 பேர் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டு ஒன்று திருப்போரூர் பஸ்நிலையம் அருகே எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது தண்டலம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட2 நாட்டு வெடிகுண்டுகளையும் முருக மங்கலத்தில் உள்ள வெடிபொருள் கிடங்கிற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+2
- வளைவு பகுதியில் டாஸ்மாக் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் கவிழ்ந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
- விடுமுறை நாட்களில் கூடுதல் கூட்டம் காணப்படுவதால் அந்த வழியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பைபாஸ் சாலையின் முக்கிய வளைவு பகுதியில் அடுத்தடுத்து, மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு மாலை நேரத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு மது வாங்க டாஸ்மாக் செல்லும் குடிமகன்களால் விபத்துகள் நடந்து வருகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் கூட்டம் காணப்படுவதால் அந்த வழியாக பொது மக்களும், வாகன ஓட்டிகளும் செல்வதற்கே அச்சப்படும் நிலை உள்ளது.
செங்கல்பட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் முக்கிய சாலையாக கொத்திமங்கலம் பைபாஸ் இருப்பதால், வளைவு பகுதியில் டாஸ்மாக் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் கனரக வாகனங்கள் நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அப்பகுதி டாஸ்மாக் கடையை ஊருக்கு வெளியே மாற்றும்படி அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது.
- பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மாமல்லபுரம்:
சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று(புதன்கிழமை) மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரம் வருகை தரும் அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது என்றும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து. நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 56). இவர் கடந்த 22-ந் தேதி காலை 11 மணியளவில் மனைவியுடன் சொந்த விஷயமாக வீட்டை பூட்டிக்கொண்டு காரைக்குடி சென்றார்.
நேற்று முன் தினம் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ¾ கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






