என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்வரின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி: திருப்போரூர் எம்.எல்.ஏ பங்கேற்பு
- திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- மாணவ - மாணவியர் 100 பேருக்கு தமிழக முதல்வரின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணம் அரசினர் மேல்நிலை பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர் 100 பேருக்கு, தமிழக முதல்வரின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் திருப்போரூர் வி.சி.க. எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சைக்கிள்களை வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story






