என் மலர்
செங்கல்பட்டு
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஏசாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 26), கொத்தனார். இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பவானி நகரில் வீடு கட்டும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த பாண்டித்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் பாண்டித்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் எரிந்து சேதம் அடைந்தது. நோயாளி, டிரைவர், உதவியாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் உள்நோயாளிகள், புற நோயாளிகள் என ஏராளமானோர் வருகை தருகின்றனர். இங்கு நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்வதற்காக மூதாட்டி ஒருவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகே ஆம்புலன்சில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் கசிந்து தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சில் இருந்த மூதாட்டி, டிரைவர் செல்வகுமார், உதவியாளர் அம்பிகா ஆகியோர் அவசர அவசரமாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மதுராந்தகம் ஒன்றியத்தில் ஏரியில் மண் அள்ளும்போது 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் ரூ.40 லட்சம் செலவில் ஏரி குடிமராமத்து பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் உள்ள மண்ணை அள்ளி கரையில் போட்டனர்.
அப்போது பொக்லைன் எந்திரத்தில் 6 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிலையை ஏரிக்கரை அருகே வைத்து வழிபாடு செய்தனர். மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் சிவன் கோவிலோ, பெருமாள் கோவிலோ இல்லாத நிலையில் அங்கு சிவலிங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் பரனூர் மேம்பாலம் அருகே உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் போன்றவற்றை ஆர்.டி.ஓ. பாஸ்கரன் வழங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் விஜயா காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மத்திய தொல்பொருள் துறை இயக்குனர் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட குடைவரை சிற்பங்கள் உலக புகழ் பெற்ற நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இவற்றை காண வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் அதிகமானோர் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு.கடற்கரை ஓரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம் அமைந்திருப்பதால் அங்குள்ள சிற்பங்கள் உப்புக்காற்றால் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை வேதியியல் பிரிவு வல்லுனர்கள் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. இருப்பினும் சிற்பங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறது.
உப்பு காற்றால் சிற்பங்கள் பாதிக்காமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து நேற்று மத்திய தொல்பொருள் துறை இயக்குனர் வித்யாவதி புதுடெல்லியில் இருந்து தன்னுடன் வந்திருந்த தொல்லியல் துறையின் வேதியிலில் பிரிவு வல்லுனர்களுடன் கடற்கரை கோவில், ஐந்துரதத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். அப்போது தன்னுடன் வந்திருந்த வேதியியல் பிரிவு வல்லுனர்கள், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அவருடன் சென்னை வட்ட தொல்பொருள் துறை கண்காணிப்பாளர்சுப்பிரமணியம், திருச்சி வட்ட தொல்பொருள்துறை கண்காணிப்பாளர் அருள்ராஜ், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு வல்லுனர்கள், அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 390 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் கங்கையம்மன் நகரை சேர்ந்த 24 வயது வாலிபர், 46 வயது பெண், பாரதி நகரை சேர்ந்த 21 வயது வாலிபர், அம்பிகா நகரை சேர்ந்த 41 வயது பெண், கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 28 வயது பெண், மண்ணிவாக்கம் ராமகிருஷ்ணா நகரில் வசிக் கும் 73 வயது முதியவர், 63 வயது மூதாட்டி உள்பட 48 பேர், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் தெருவை சேர்ந்த 70 வயது முதியவர், 22 வயது வாலிபர், பேரமனூர் எம்.ஜி. ஆர்.தெருவை சேர்ந்த 26 வயது வாலிபர், 55 ஆண், உள்பட 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காயரம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த 25 வயது வாலிபர், கீழ்கல்வாய் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் 60 வயது முதியவர், அருங்கால் செங்கழனியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 38 வயது பெண் உள்பட 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 390 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. இவர் களில் 23 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 788 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியை சேர்ந்த 29 வயது பெண், ஆதனூர் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 51 வயது பெண், சோமங்கலம் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயது ஆண், ஒரகடம் பகுதியை சேர்ந்த 65 வயது பெண், 70 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 663 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 648 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்தது. 1,759 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்து 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 ஆயிரத்து 443 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1474 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 413 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 5 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,873 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 031 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,873 ஆக அதிகரித்துள்ளது.

ஊரப்பாக்கம் அருகே தி.மு.க. கிளை செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம் அண்ணா நகர், கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). பெயிண்டரான இவர், அண்ணா நகர் தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார்.
நேற்று இரவு ஆதனூர் ரோட்டில் பார்த்திபன் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போலீசார், பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா?. ரியல் எஸ்டேட் தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலை கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,429 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 008 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,429 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 357 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,120 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 3,62,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,231-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,34,436 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 25,763 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 357 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,120 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 22,736 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 419 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி எதிரே நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அசோக் என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த இருவரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரித்தபோது, விக்னேஷ் மற்றும் அசோக் இருவரும் குற்ற பின்னணி உள்ளவர்கள் என்பது தெரியவந்தது. விக்னேசின் கை சிதறி 5 விரல்கள் துண்டானது. அசோக்கின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வலது கண் பார்வை போனது.
சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி சாமுண்டிஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தினார். அப்போது மேலும் ஒரு வெடிகுண்டு கைப்பையில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
கைப்பையை திறந்து பார்த்ததில் விக்னேஷ் பெயரில் 2 வங்கி கணக்கு புத்தகம், ஒரு அடையாள அட்டை, ஒரு மதுபாட்டில், 2 பெரிய கத்திகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். ஒரு வங்கி கணக்கு புத்தகத்தில் பெருமாள் மகன் விக்னேஷ் என்றும் மற்றொன்றில் நாகராஜன் மகன் விக்னேஷ் என்றும் இருந்தது.
நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த ஆகாஷ், சஞ்சய், விக்கி என்கிற மொட்டை விக்கி, அப்பாஸ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அசோக் மற்றும் விக்னேஷ் இருவரும் கேளம்பாக்கம் பகுதியில் ரவுடிகள் மீது வெடிகுண்டு வீசி கொல்வதற்காக பையில் வெடிகுண்டை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வகைப்படுத்தல் மையம் திறப்பு விழா நடந்தது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வகைப்படுத்தல் மையம் திறப்பு விழா நடந்தது. இதற்கு வருவாய் ஆர்.டி.ஓ. செல்வம் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தி மலர், சுகாதார துறை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், துணை இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு கொரோனா வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்து எக்ஸ்ரே, இ.சி.ஜி.பரிசோதனை மையம் உள்ளிட்ட 7 மையங்களை பார்வையிட்டார்.