என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் கொரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வகைப்படுத்தல் மையம் திறப்பு விழா நடந்தது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வகைப்படுத்தல் மையம் திறப்பு விழா நடந்தது. இதற்கு வருவாய் ஆர்.டி.ஓ. செல்வம் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தி மலர், சுகாதார துறை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், துணை இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு கொரோனா வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்து எக்ஸ்ரே, இ.சி.ஜி.பரிசோதனை மையம் உள்ளிட்ட 7 மையங்களை பார்வையிட்டார்.
Next Story






