என் மலர்
செய்திகள்

கபசுர குடிநீர்
செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர்
செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் பரனூர் மேம்பாலம் அருகே உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் போன்றவற்றை ஆர்.டி.ஓ. பாஸ்கரன் வழங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் விஜயா காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டார்.
Next Story






