என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
    X
    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் எரிந்து சேதம் - நோயாளி, டிரைவர், உதவியாளர் உயிர் தப்பினர்

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் எரிந்து சேதம் அடைந்தது. நோயாளி, டிரைவர், உதவியாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் உள்நோயாளிகள், புற நோயாளிகள் என ஏராளமானோர் வருகை தருகின்றனர். இங்கு நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்வதற்காக மூதாட்டி ஒருவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு அருகே ஆம்புலன்சில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் கசிந்து தீப்பிடித்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சில் இருந்த மூதாட்டி, டிரைவர் செல்வகுமார், உதவியாளர் அம்பிகா ஆகியோர் அவசர அவசரமாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×