என் மலர்
செங்கல்பட்டு
சாலையின் குறுக்கே திடீரென நாய் ஓடி வந்ததால், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலையில் காயமடைந்து பரிதாபமாக பலியானார்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் (வயது 56). நேற்று முன்தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பாதுகாப்பு பணிக்காக இவர், திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்துக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் பணி முடிந்து இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கல்பாக்கம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலை வழியாக அவர் வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததால் பதறிப் போன சந்திரசேகர், அதன் மீது மோதுவதை தவிர்க்க திடீர் என பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைத்தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.35 மணிக்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவருக்கு கலையரசி என்ற மனைவியும் என்ஜினீயரிங் பட்டதாரியான விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகை புராதன சின்னம் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புலிக்குகை புராதன சின்னம் பல்லவ மன்னர்களால் 7-ம் நூற்றாண்டில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட முக்கிய பாரம்பரிய நினைவு சின்னமாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். முழுக்க, முழுக்க பல்லவர்கள் புலிகளின் தலைகளை சிற்பங்களாக வடித்து இங்குள்ள பாறையில் அழகுற வடிவமைத்துள்ளனர். இதனை உருவாக்கும்போது புலிக்குகை முகப்பு பகுதியில் 3 அடி ஆழத்தில் படிகள் அமைத்து அகழியை உருவாக்கி உள்ளனர்.
மாமல்லபுரம் தொல்லியல் துறை இவற்றை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் புலிக்குகையில் உள்ள முன் பக்க அகழியில் 3 அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. முன் பக்க அகழி பகுதி முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில் ஒரு குளத்தில் உள்ள புராதன சின்னம் போல் புலிக்குகை ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள புலிக்குகை விரைவில் திறப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்காக மாமல்லபுரம் தொல்லியல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைத்தவுடன் புலிக்குகை உள்ளிட்ட மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களும் திறக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்தது. 554 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 426 பேர் உயிரிழந்துள்ளனர். 268 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 194 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 497 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 658 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 88 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 89-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 46 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 723-ஆக உயர்ந்தது. 564 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 130 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 499 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 658 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 844-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 150 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இதுவரை 426 பேர் உயிரிழந்துள்ளனர். 268 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்பாக்கத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு அருகே கடற்கரையோரத்தில் நேற்று காலை 8 மணியளவில் ஒரு பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதை அறிந்த கல்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அந்த பெண் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். 40 வயது மதிக்கத்தக்க அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இறந்து போன பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனூர் அருகே பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்த காருக்கு காற்று அடித்தபோது, அந்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேல்மலையனூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் மகன் அருள்ராஜ் (வயது 18). டிரைவர். இவர் மேல்மலையனூரில் இருந்து நீலாம்பூண்டி வழியாக செஞ்சி நோக்கி காரில் புறப்பட்டு சென்றார். அப்போது கார் டயரில் காற்று குறைவாக இருந்துள்ளது. காற்றுபிடிப்பதற்காக நீலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கரீம் (60) என்பவரின் பஞ்சர் கடை முன்பு அவர் காரை நிறுத்தினார். இதையடுத்து கார் டயருக்கு கரீம் காற்று பிடித்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு கார், நின்று கொண்டிருந்த அருள்ராஜின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கரீம், காருக்குள் இருந்த அருள்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதனிடையே விபத்துக்கு காரணமான கார் டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இது குறித்து தகவலின் பேரில் வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, தனிப்பிரிவு ஏட்டு பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த கரீம், அருள்ராஜ் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 86 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக உயர்ந்தது. 552 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 879 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 484 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 654 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர்.
281 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கால்வாய் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 60), இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கேசவன் மேய்ச்சலுக்காக தனது எருமை மாடுகளை ஓட்டிச் சென்றார். பின்னர் மீண்டும் மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டி கொண்டு வரும்போது பாண்டூர் அருகே அறுந்து கிடந்த மின்சார வயரை எருமை மாடு ஒன்று மிதித்தது.
இதில் மின்சாரம் தாக்கி மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து லட்சுமி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேங்கி நிற்கும் மழைநீரில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த படகு துறை அகழி மற்றும் முன்புற பகுதியில் உள்ள அகழி போன்றவற்றில் மழை நீர் தேங்கி கடற்கரை கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
சுற்றுலா பயணிகள் மழைக் காலங்களில் இங்கு வரும் போது இந்த காட்சியை ரசித்து படம் பிடிப்பது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரை கோவில் மூடப்பட்டுள்ளதால் இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி நிலையில் மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். மழை, புயல் ஓய்ந்த நிலையிலும் நேற்றும் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் கடலில் சீற்றம் அதிகம் உள்ளது என தெரிந்தும் அலட்சியமாக கடலில் குளித்து கொண்டிருந்தனர்.
போலீசார் பலமுறை அவர்களை எச்சரித்தும் யாரும் அதனை பொருட்படுத்தாமல் கடலில் குளித்து கொண்டிருப்பதையும், அலைகள் வரும் போது செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்ததையும் காண முடிந்தது. மேலும் தற்போது மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் போலீசார் கடலோர காவல் படை போலீசாருடன் இணைந்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மீனவர் பகுதியை சேர்ந்த நீச்சல் வீரர்கள் சிலரும் கடலில் மூழ்குபவர்களை காப்பாற்ற அங்கு கண்காணிப்பு பணியில் இருக்க காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 77 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 301 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 712 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 557 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,522 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 651 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 35, 31 வயதுடைய ஆண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 26 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர். 277 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டில் இருந்து 42 ஆயிரம் கன அடி உபரிநீர் பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீருடன் பாலாற்றின் கிளை நதியான வேகவதி மற்றும் செய்யாற்றில் மூலம் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் பாலாற்றில் கூடுதலாக வெள்ளம் வருகிறது. இதன் காரணமாக பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரம் உள்ள செங்கல்பட்டு வட்டத்துக்குட்பட்ட மேலச்சேரி, பாலூர், வில்லியம்பாக்கம், ஆத்தூர், திம்மாவரம், பழவேலி, வேதநாராயணபுரம், ஒழலூர், திருக்கமுக்குன்றம் வட்டத்துக்குட்பட்ட மணப்பாக்கம், உதயம்பாக்கம், புளிப்பரன் கோவில், வள்ளிபுரம், விளாகம் எடையாத்தூர், இரும்புலிச்சேரி, அட்டவட்டம், தண்டரை, பொய்கைநல்லூர், பூஞ்சேரி, வாயலூர், புதுப்பட்டினம், பாலாறு வலது கரை மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட பிளாப்பூர், மெய்யூர், மாமண்டூர், பழமத்தூர், பழையனூர், படாளம், புலிப்பரன் கோவில், பள்ளிப்பட்டு, பூதூர், ஈசூர், நீலமங்களம், நெல்வாய், சேவூர், மடவிளாகம், தண்டரை, செய்யூர் வட்டத்துக்குட்பட்ட பரமேஸ்வரமங்களம், கடலூர், சின்னகுப்பம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். ஆற்றை கடக்க வேண்டாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வாலாஜாபாத் வட்டம் தென்னேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தென்னேரி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அகரம், கட்டவாக்கம், மடவிளாகம், விளாகம், அளவூர், வாரணவாசி, தாழையம்பட்டு, தேவரியம்பாக்கம், தொள்ளாழி, தோனாங் குளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பனையூர், எழிச்சூர், பூண்டி, கண்ணடியான்பாளையம், குருவன்மெடு, வேண்பாக்கம், ரெட்டிபாளையம், சாஸ்திரம்பாக்கம், ஆத்தூர் வடகால், காந்தலூர், புலிப்பாக்கம், திம்மாவரம் மற்றும் செங்கல்பட்டு நகர பகுதி, மகாலட்சுமி நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் நீஞ்சல் மடுவில் இறங் கவோ, மடுவினை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக் கவோ இறங்க வேண்டாம்.
இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை தற்போது அடையும் நிலையில் உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் மழைநீர் உபரி நீராக ஏரியின் கலங்கல் மூலம் கிளியாற்றில் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உபரி நீர் செல்லும் கிளியாற்றை ஒட்டிய கரையோர கிராமங்களை சேர்ந்த கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், நீலமங்கலம், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பொண்ணை தடுப்பணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காஞ்சிபுரம் பாலாற்றில் 3 அடிக்கு மேல் தண்ணீர் கரை புரண்டு சென்று கொண்டிருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் பாலாற்றில் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுமையாக மூழ்கி 3 அடி அளவுக்கு தண்ணீர் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2017-ம் ஆண்டுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் அதை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆபத்தை உணராமல் சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
தொடர்ந்து பாலாற்றின் கரையோர பகுதிகளை கண்காணிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் தலைமையில் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.