என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    நோயாளிகளின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூறினார்.
    செங்கல்பட்டு:

    கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி உள்ளது. வட மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெயில், ராணுவ விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,608 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் கொரோனாவால் பலியானார்கள்.

    மாவட்டத்தில் இதுவரை 86,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75,621 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9,663 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 380 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது.

    நேற்று இரவு 10 மணி அளவில் கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது.

    சிகிச்சை பெறும் நோயாளிகள்

    இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடினார்கள்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, மறைமலைநகரில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடுகள் செய்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகளில் இருந்த ஆக்சிஜனையும் நோயாளிகளுக்கு பயன்படுத்தினர்.

    இதனால் இங்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் பல நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். மொத்தம் 13 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இதன் பின்னரே ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இறந்துபோன நோயாளிகளில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எனவும், ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளி எனவும் தெரிகிறது.

    13 நோயாளிகள் பலியானது பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அவர் நோயாளிகள் இறப்பு குறித்தும், ஆக்சிஜன் இருப்பு பற்றியும் அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    இதுகுறித்து கலெக்டர் ஜான்லூயிஸ் கூறும்போது, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை. போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது.

    நோயாளிகளின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன.

    இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுப்பட வேண்டும்.

    மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    உயிரிழந்த நோயாளிகளில் ஒருவரது உறவினர் கூறும்போது, ‘ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற எனது தந்தை மூச்சு விட மிகவும் சிரமப்பட்டார். இதுபற்றி டாக்டர்களிடம் கூறியபோது, ஆக்சிஜன் இல்லை. விரைவில் வந்துவிடும் என்று எந்தவித பதட்டமும் இல்லாமல் தெரிவித்தனர்’ என்றார்.

    ஏற்கனவே தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
    நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    சோழிங்கநல்லூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    அரவிந்த் ரமேஷ்திமுக171558
    கே. பி. கந்தன்அதிமுக136153
    ஆர். பி. முருகன்தேமுதிக3912
    ராஜீவ் குமார்மநீம30284
    மிக்கேல்நாம் தமிழர்38872
    பல்லாவரம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ஐ. கருணாநிதிதிமுக126427
    எஸ். ராஜேந்திரன்அதிமுக88646
    டி. முருகேசன்தேமுதிக3718
    செந்தில்குமார்மநீம20612
    மினி ஸ்ரீ கனகராஜ்நாம் தமிழர்21362
    தாம்பரம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    எஸ். ஆர். ராஜாதிமுக116840
    டி. கே. எம். சின்னையாஅதிமுக80016
    எம். கரிகாலன்அமமுக4207
    இளங்கோ சிவாமநீம22530
    சுரேஷ் குமார்நாம் தமிழர்19494
    செங்கல்பட்டு
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    எம். வரலட்சுமிதிமுக130573
    எம். கஜேந்திரன்அதிமுக103908
    ஏ. சதிஷ்குமார்அமமுக3069
    முத்தமிழ்செல்வன்இஜக4146
    சஞ்சீவிநாதன்நாம் தமிழர்26868
    திருப்போரூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    எஸ்.எஸ். பாலாஜிவிசிக93954
    திருக்கச்சூர் ஆறுமுகம்பாமக92007
    எம். கோதண்டபாணிஅமமுக7662
    லாவண்யாமநீம8194
    மோகனசுந்தரிநாம் தமிழர்20428
    செய்யூர் (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    பனையூர் பாபுவிசிக82750
    எஸ். கனிதா சம்பத்அதிமுக78708
    ஏ. சிவாதேமுதிக3054
    அன்பு தமிழ்சேகரன்மநீம1968
    ராஜேஷ்நாம் தமிழர்9653
    மதுராந்தகம் (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கே. மரகதம் குமாரவேல்அதிமுக86646
    மல்லை சத்யாமதிமுக83076
    என். மூர்த்திதேமுதிக2137
    தினேஷ்மநீம1488
    சுமிதாநாம் தமிழர்9293
    தாம்பரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி காயத்ரி (36). இவர், நேற்று மதியம் அவரது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காயத்ரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,582 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,582 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 554 உயர்ந்துள்ளது. 2,725 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.
    வண்டலூர்:

    சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை அருகே உள்ள கோவில் காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31), இவர் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவரும் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    வண்டலூர் மேம்பாலம் அருகே வரும்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், லேசான காயம் அடைந்த சக்திவேல் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சக்திவேல் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கல்பாக்கம் அருகே அரசு பஸ்சும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த 40 பேர் ஒரு தனியார் பஸ் மூலம் கல்பாக்கத்தில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் சென்ற பஸ் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராம வளைவில் வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் தனியார் பஸ்சின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏழுமலை (74) சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மண்ணிவாக்கம் ஊராட்சியிலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    வண்டலூர்: 

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மண்ணிவாக்கம் ஊராட்சியிலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக மண்ணிவாக்கம் ஊராட்சியில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர்.

    இதில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,142 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இந்தநிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 848 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சைப் பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 508 உயர்ந்துள்ளது. அவர்களில் 2,793 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரம், பச்சையம்மன் நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 49). இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஏணி போட்டு ஏறி தென்னை மரத்தில் இருந்த ஓலையை வெட்ட முயன்றார். அப்போது திடீரென நிலைதடுமாறி 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் உள்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இது தாம்பரம் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை அடுத்த கல்பாக்கம் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×