search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் பலி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
    • காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் ராஜேஷ் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம், சீர்காழி நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

    காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேஷ் நேற்று இரவு தனது தம்பி ராஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.

    அப்போது சீர்காழி புறவழிச்சாலையில் சென்ற போது நத்தம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்தில் இறந்த ராஜேஷ்சுக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீகாந்த் நள்ளிரவு 1 மணி முதல் 1-30 மணி வரை போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    பின்னர் அவுட் போஸ்டில் உள்ள ஓய்வு அறைக்கு சென்றார். ஸ்ரீகாந்த் ஓய்வு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட சக போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஸ்ரீகாந்த் இருந்த ஓய்வு அறைக்கு சென்ற போது நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மீட்ட சக போலீஸ்காரர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சையத் ஜஹாங்கீர் கூறுகையில்:-

    ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது. அப்போது ஸ்ரீகாந்த் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவன் அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர்.
    • மாணவனுக்கு உதவ சென்று விபத்தில் சிக்கி போக்குவரத்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மணிகண்டம் தீரன் நகரை சேர்ந்தவர் அகிலன் (வயது 20) . இவர் திருச்சியில் உள்ள ஒரு இனஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (19) இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அரிஸ்டோ பாலம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது. இதனை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் (45) பார்த்தார்.

    உடனே தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை எடுத்தார். அதற்குள் அந்த வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்து விட்டனர்.

    இந்த கண்ணிமைக்கும் நேரத்தில் மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக அகிலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மேலும் மாணவன் அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். பின்னர் மூன்று பேரும் மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை காவலர் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவனுக்கு உதவ சென்று விபத்தில் சிக்கி போக்குவரத்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
    • சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது இரட்டை மகன்கள் அஜித்கபூர் (வயது 28) மற்றும் அனில் கபூர் (28). இதில் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவரான அனில் கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

    அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான லோயர் கேம்ப்க்கு வந்தார். அவரை தந்தை அழகர்சாமி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனுக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் அவர் எவ்வாறு இறந்தார்? என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2016-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.
    • தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சரவணன் (வயது 35).

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

    கல்லூரி பஸ் மோதியது

    இந்நிலையில் சரவணன் நேற்று மாலை பரமத்தி சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து மரவாபாளையம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற, திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல்லூரி பஸ், அதிவேகமாக சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சரவணனை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கு பதிவு

    கல்லூரி பஸ்சை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி பஸ்சை பறிமுதல் செய்தனர். விபத்தில் பலியான சரவணனுக்கு ராசி (33) என்ற மனைவியும், கார்முகிலன்(5), அகிலன்(1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சரவணன் தற்போது பரமத்தி வேலூரில் உள்ள மாமியார் வீட்டில் குடியிருந்து வந்தார்,

    ×