search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman killed"

    • 2016-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.
    • தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சரவணன் (வயது 35).

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

    கல்லூரி பஸ் மோதியது

    இந்நிலையில் சரவணன் நேற்று மாலை பரமத்தி சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து மரவாபாளையம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற, திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல்லூரி பஸ், அதிவேகமாக சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சரவணனை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கு பதிவு

    கல்லூரி பஸ்சை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி பஸ்சை பறிமுதல் செய்தனர். விபத்தில் பலியான சரவணனுக்கு ராசி (33) என்ற மனைவியும், கார்முகிலன்(5), அகிலன்(1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சரவணன் தற்போது பரமத்தி வேலூரில் உள்ள மாமியார் வீட்டில் குடியிருந்து வந்தார்,

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எலி மருந்து சாப்பிட்ட போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயதேவன் (வயது 30). கடந்த 2011-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரத்திற்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ்காரர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த செண்பகம் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

    இதனிடையே இருவரும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். செண்பகம் திருவெறும்பூர் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தார். அவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி அடுத்த மாதம் 17-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் நடத்தி முடித்தனர். இதனிடையே கடந்த 17-ந்தேதி ஜெயதேவன் நவல்பட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    ஏற்கனவே அவர் வயிற்றுப்புண் மற்றும் குடல் வால்வு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் விடுப்பு எடுத்து சிகிச்சை மேற்கொண்டார்.

    கடந்த 28-ந்தேதி வயிற்று வலி அதிகமாகவே, வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காதலன் வி‌ஷம் அருந்திய தகவல் கிடைத்ததும் திருச்சிக்கு விரைந்து வந்த செண்பகம், ஜெயதேவனை உடனிருந்து கவனித்து கொண்டார். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர், இருவருக்கும் காதல் மலர்ந்த இடமான ராமேஸ்வரத்திற்கு தனியாக சென்றார். ராமேஸ்வரம் கோவில் அருகே சென்றதும் அவரும் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். மயங்கி கிடந்த செண்பகத்தை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    ஜெயதேவன் தற்கொலை முயற்சி குறித்து திருச்சி துவாக்குடி போலீசாரும், செண்பகம் தற்கொலை முயற்சி குறித்து ராமேஸ்வரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சமீர் அகமது மிர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார். சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை  கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.  
     
    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    ×