என் மலர்
செங்கல்பட்டு


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட விலங்குகள் ஊர்வன பறப்பன உள்ளன.
தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முக்கிய விலங்குகளான யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல் மற்றும் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிம்பான்சி குரங்குகளுக்காக அதன் வளாகத்தில் ஷவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பறவை இனங்களுக்கு அதன் கூண்டுகளை சுற்றிசாக்கு கோனி மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது
சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவை வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது
உள்ளரங்கில் காணக்கூடிய ஊர்வன விலங்குகளுக்கு வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் தரையில் தண்ணீர் தெளிக்கப்பட்டும் மரக்கிளைகள் மர போலந்து போன்றவை செயற்கை முறையில் உள்ளே அமைத்துள்ளனர். இதன்மூலம் வெளியிலிருந்து ஊர்வன விலங்குகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்றவற்றுக்கு ஐஸ் கட்டியாக உறைய வைத்த மாமிச உணவுகள் வெயிலை முன்னிட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதன் கூண்டுக்குள் வைத்து தண்ணீர் பீச்சி அடித்து இருவேளை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள குளிப்பாட்டி வருகின்றனர்.
இதுபோல் அனைத்து விலங்குகளுக்கும் அதன் வாழிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்கு வகைகள் இளநீரும் கொடுக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் உள்ள மாரி சின்னம்மனை மீனவர் சமுதாய மக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
கோவிலின் தெப்ப உற்சவ விழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைவான அளவில் உள்ளூர் பக்தர்களை வைத்து நடத்தப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவில் விழாக்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று இரவு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கடம்பாடி மாரி சின்னம்மன் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. வாணவேடிக்கை, சாமி ஊர்வலம், பொருட் காட்சி ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
சென்னை, மரக்காணம், புதுச்சேரி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மீனவர் சமுதாய மக்கள் கடம் பாடியில் குவிந்து சாமி தரிசனம் செய்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.
இன்று காலை சாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. மாமல்லபுரம் போலீசார் நேற்று இரவு விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.
அப்போது புராதன சின்ன பகுதிகளான கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை, அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்கள் மின்னொளியில் ஜொலித்தன
இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மின்னொளியில் மாமல்லபுரம் சுற்றுலா சின்னங்களை பார்க்க மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக மின்னொளி காட்சியில் புராதன சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீண்டும் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சிகளை பார்க்க அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களில் மின்னொளி அமைத்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
புதிய லேசர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய விளக்குகளை மற்றும் தொல்லியல் துறை அமைத்து வருகிறது.
இந்த மின்னொளி சோதனை கடந்த 2 நாட்களாக அனைத்து புராதன சின்னங்களிலும் நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை எடுத்து யாரோ மர்ம நபர் போலியான கணக்கு தொடங்கி தன்னுடைய நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீசார் கலைவாணன், மெகபூப் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த குற்றத்தை செய்தவர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அந்த சிறுவனை கைது செய்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
திருவிடந்தை அடுத்த தெற்குப்பட்டை சேர்ந்தவர் அர்ஜூனன்(வயது.67). தொழிலாளி. இவர் அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார்.
அவர் சாலையை கடக்க திரும்பினார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து பற்றி அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து அர்ஜூனன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள ஓட்டேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுசீலா(வயது 58). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து வெளியே வரும்போது முகவரி கேட்பது போல் நடித்த வாலிபர் திடீரென சுசீலா அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுசீலா கூச்சலிட்டார். இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்து ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபரிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரித்த போது அவர் தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த குமார்(28) என்பது தெரிய வந்தது.
இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 9, தி.மு.க. 4, சுயேட்சை, ம.தி.மு.க. தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்று இருந்தன.
அதிக இடங்களில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதால் மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. போட்டியின்றி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 11-வது வார்டு உறுப்பினர் வளர்மதி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து 5-வது வார்டு உறுப்பினர் மோகன் குமார் மனு தாக்கல் செய்தார். இதனால் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கு போட்டி நடந்தது. இதில் வளர்மதி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. 6 வாக்குகள் பெற்றது.
இதனால் வளர்மதி மாமல்லபுரம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி இருப்பது தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியும் 54 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும், 7 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர்.
இதில் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில் நேற்று தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து தாம்பரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி கமலக் கண்ணன் மேயர் பதவிக்கும், துணை மேயர் வேட்பாளராக காமராஜ் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று காலை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய மேயராக பதவியேற்க பட்டியல் இனத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி தனது தந்தை கமலக்கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
மாநகராட்சி ஆணையரிடம் மேயர் பதவிக்குப் போட்டியிடுவதாக அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை 49-வது வார்டு உறுப்பினர் டி.காமராஜன் முன்மொழிந்தார். 62-வது வார்டு உறுப்பினர் இந்திரன் வழிமொழிந்தார்.
மேயர் போட்டியில் வேறு யாரும் இல்லாத நிலையில் போட்டியின்றி வசந்தகுமாரி தாம்பரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு மேயருக்கான அங்கி அணிவிக்கப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் வசந்தகுமாரி மேயருக்கான பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு மேயர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணி அளவில் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் காமராஜ் போட்டியின்றி தேர்வு ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நினைத்தது ஆசிரியர் பணி- கிடைத்தது மேயர் பதவி: பிரியா சிறப்பு பேட்டி






