என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம்
மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின்னொளியில் பார்க்க ஏற்பாடு
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீண்டும் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சிகளை பார்க்க அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.
அப்போது புராதன சின்ன பகுதிகளான கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை, அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்கள் மின்னொளியில் ஜொலித்தன
இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மின்னொளியில் மாமல்லபுரம் சுற்றுலா சின்னங்களை பார்க்க மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக மின்னொளி காட்சியில் புராதன சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீண்டும் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சிகளை பார்க்க அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களில் மின்னொளி அமைத்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
புதிய லேசர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய விளக்குகளை மற்றும் தொல்லியல் துறை அமைத்து வருகிறது.
இந்த மின்னொளி சோதனை கடந்த 2 நாட்களாக அனைத்து புராதன சின்னங்களிலும் நடத்தப்பட்டது.

Next Story