என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
    X
    மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

    மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வெற்றி

    மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி இருப்பது தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 9, தி.மு.க. 4, சுயேட்சை, ம.தி.மு.க. தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்று இருந்தன.

    அதிக இடங்களில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதால் மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. போட்டியின்றி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 11-வது வார்டு உறுப்பினர் வளர்மதி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து 5-வது வார்டு உறுப்பினர் மோகன் குமார் மனு தாக்கல் செய்தார். இதனால் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கு போட்டி நடந்தது. இதில் வளர்மதி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. 6 வாக்குகள் பெற்றது.

    இதனால் வளர்மதி மாமல்லபுரம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி இருப்பது தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×