என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பூனேக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருந்தவர் அருண்குமார் பாதுரி (வயது 65). நேற்று இரவு வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அருண்குமார் பாதுரி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான பூனேக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மும்பையை சேர்ந்த அழகியிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு அவரது செல்போன், பணம் ஆகியவற்றை ரவுடி கும்பல் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மாமல்லபுரம்:

    மும்பையில் இருந்து விமானத்தில் அழகியை வரவழைத்து லாட்ஜில் அறை எடுத்து தங்கிய சென்னை ரவுடிகளான ராஜேஸ் தீனதயாளன், விஸ்வநாதன் ஆகிய 3 பேரும் அவருடன் விடிய விடிய உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் கொடுக்காமல் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டனர்.

    பின்னர் 3 ரவுடிகளும் மும்பை அழகியை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை அழகி ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தார். பின்னர் இது பற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ், தீனதயாளன், விஸ்வநாதன் ஆகிய 3 ரவுடி களையும் கைது செய்தனர்.

    மும்பை அழகியின் செல்போன் மற்றும் ரவுடிகளின் செல்போன் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ‘செக்ஸ் ஆப்’ மூலம் ரவுடிகள் அழகியை தொடர்பு கொண்டு பேசி இருப்பது அம்பலமானது. இதனால் ரவுடிகள் 3 பேரும் இதுபோன்று மேலும் பல பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ரவுடிகளிடம் இருந்த 2 பெரிய அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

    ரவுடிகள் பறித்துச் சென்ற செல்போனில் தான் அழகி மும்பை செல்வதற்கான டிக்கெட்டும் இருந்துள்ளது. இதையடுத்து செல்போனில் இருந்த டிக்கெட் மூலம் அழகியை போலீசார் மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரவுடி கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    அறக்கட்டளைக்கு சொந்தமான 25 ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் கேளிக்கை பூங்கா செயல்பட்டு வந்தது.

    மாமல்லபுரம்:

    மால்லபுரம் அடுத்த பட்டிபுலம், சாலவான்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையோர பகுதியில் உள்ள இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 25 ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் கேளிக்கை பூங்கா செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கட்டிடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்போரூர் தாசில்தார் முன்னிலையில் பொக்லைன்கள் எந்திரங்களை வைத்து உடைத்து அகற்றி மீட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் நடந்து சென்று புராதன சின்னங்களை பார்ப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர்களின் வசதிக்காக, பெண்களே இயக்கும் மூன்று பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் சிறந்த சுற்றுலாதலமாக திகழ்கிறது. பசுமை பாரம்பரியம் என்ற திட்டத்தின் கீழ் 3.76 கோடி ரூபாய் மதிப்பில் மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பசுமை பாரம்பரிய மேம்பாட்டு திட்டத்தை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் நடந்து சென்று புராதன சின்னங்களை பார்ப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர்களின் வசதிக்காக, பெண்களே இயக்கும் மூன்று பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முதல் கட்டமாக இந்த பேட்டரி வாகனங்கள் கடற்கரை கோவில் வளாகத்தில் செயல்படுகிறது. வரும் நாட்களில் மற்ற இடங்களிலும் பேட்டரி வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பேட்டரி வாகனம் இயக்கத்துக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

    நிகழ்ச்சியில் தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திட்ட செயலர்கள் தபாசிஷ் நியோகி, கல்பனா சங்கர், இஸ்மாயில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் முதல் முறையாக அங்குள்ள கல்வெட்டுகளில் இருக்கும் பழங்கால சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு எழுத்துக்களின் அர்த்தங்களை மொழி பெயர்த்து, தமிழில் விளக்க போர்டுகளை மத்திய தொல்லியல் துறை வைத்துள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் ஏராளமான கல்வெட்டு எழுத்துக்கள் உள்ளன.

    தற்போதைய தமிழ் எழுத்துக்கள் போல் இல்லாததால் கல்வெட்டுக்களில் எழுதி இருப்பது என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் கல்வெட்டு பற்றிய குறிப்புகளும் புராதன சின்னங்கள் அருகே வைக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் எதுவும் தெரியாமல் பார்த்து செல்லும் நிலையே நீடித்து வருகிறது.

    மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் கூறுவதையும் அவர்கள் விற்கும் விளக்க புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி படித்தும், மட்டுமே தெரிந்து கொண்டு சிற்பங்களை பார்த்து ரசித்து வந்தனர்.

    எனவே கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றிய குறிப்புகளை அனைவரும் அறியும் வகையில் குறிப்புகள் வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். வடமாநிலங்களில் உள்ள புராதன சின்னங்கள் பகுதியில் வைத்திருக்கும் விளக்க தகவல் போர்டுகள் போன்று தமிழ்நாட்டில் உள்ள புராதன சின்னங்கள் பகுதியிலும் ஏன் போர்டுகள் வைக்கவில்லை? என்று சிற்பக்கலை ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் முதல் முறையாக அங்குள்ள கல்வெட்டுகளில் இருக்கும் பழங்கால சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு எழுத்துக்களின் அர்த்தங்களை மொழி பெயர்த்து, தமிழில் விளக்க போர்டுகளை மத்திய தொல்லியல் துறை வைத்துள்ளது.

    இதேபோல் ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்கள் பகுதியிலும் விளக்க தகவல் போர்டுகள் வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலை ஓரத்தில் பிரபலமான இரணியம்மன் கோவில் உள்ளது. அதன்பின் புறத்தில் அரசுக்கு சொந்தமான 1.75 ஏக்கர் கொண்ட நிலம் உள்ளது.

    இதனை சிலர் ஆக்கிரமித்து ஓட்டல், கடை, வாட்டர் சர்வீஸ் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைத்து பல ஆண்டுகளாக வாடகை விட்டு இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அரசு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகத்துக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த் துறையினர் 3 பொக்லைன் எந்திரங்களால் ஆக்கிரமித்து கட்டி இருந்த ஓட்டல், எடை மேடை, 3 ஷெட், ஒர்க்ஷாப், டிங்கரிங், பெயிண்டிங், வாட்டர் சர்வீஸ், மெக்கானிக் கடை உள்ளிட்ட 9 கடைகளை அதிரடியாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

    அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மதுராந்தகம் அருகே விபத்தில் தந்தை மற்றும் 6 மாத குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுரையை சேர்ந்தவர் அஸ்வினிகுமார் (வயது 28). இவரது மனைவி சிவ பாக்கியம் (23). இவர்களது மகள் திவானா(2) மற்றும் அவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது.

    இந்த நிலையில் அஸ்வினி குமார் குடும்பத்துடன் காரில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.

    பின்னர் இன்று அதிகாலை அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மதுரை நோக்கி காரில் புறப்பட்டார். அஸ்வினி குமார் காரை ஓட்டிச்சென்றார்.

    மதுராந்தகம் அருகே புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது அவ்வழியே வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அஸ்வினி குமாரும், அவரது 6 மாத ஆண் குழத்தையும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும், அவரது மனைவி சிவபாக்கியம், மகள் திவானா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிய சிவபாக்கியத்தையும், திவானாவையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2,371 கிளைகளிலும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்து வருவதாக செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு :

    பிரதமர் மோடி ‘மனதில் குரல்’ என்ற தலைப்பில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டு மக்களிடம் கலந்துரையாடி வருகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு அரிய தகவல்கள், கருத்துக்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பகிரப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி அளவிலும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.

    மனதின் குரல் நிகழ்ச்சியின் 89-வது நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை நெடுங்குன்றத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் பார்த்தனர். இதில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன், லோகநாதன், செயலாளர் அரிபாபு, ஒன்றிய தலைவர் கிருஷ்ணராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மோடி விளக்கினார். 6-ம் நூற்றாண்டில் இருந்து தற்போதைய இ.நோட்டு வரை ரூபாய் நோட்டு வளர்ந்த விதத்தை ஒரு பெண்மணி தெரிவித்ததை அந்த பெண்ணுடன் உரையாடி விளக்கினார்.

    கணிதம் என்பது பாடத்திலும், வாழ்க்கை பாடத்திலும் தவிர்க்க முடியாதது. ஆனால் அதை மாணவர்கள் கடினமாக நினைப்பதை மாணவர்களுடன் உரையாடிய போது உணர்ந்து கொண்டதாகவும் அதே கணிதத்தை வேதகால அடிப்படையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மிக எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்க சொல்லி கொடுப்பதையும் அதை எப்படி கற்றுக்கொண்டார் என்பதையும் அவருடன் உரையாடி கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் பயனுள்ள இந்த நிகழ்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்ட பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் அடுத்த மாதம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். சவாலான இந்த பணியை மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் செய்து காட்ட வேண்டும் என்றார்.

    அவரது கட்டளையை ஏற்று அடுத்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2,371 கிளைகளிலும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்து வருவதாக செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமளா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு உறுப்பினர் நிந்துமதி திருமலை கலந்து கொண்டார்.

    துணை தலைவர் சத்தியா கோபிநாத் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கமதீர்‌ஷ அன்சார், ராஜா, ராஜி, விஜயபாபு, சந்திர காந்த், விஜயக்குமார், சம்பத் குமார், விஜயா ஆகியோர் பங்கேற்றனர்.

    அஞ்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்வி தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார்.

    திம்மாவரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் அருள் தேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வீராபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் டில்லி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளராக மோகனா ஜீவா கலந்து கொண்டார். ரெட்டிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சந்தியா செந்தில்குமார், வெங்கடாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் பாலாஜி, ஆப்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் ஆப்பூர் குமாரசாமி, சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் விஜயலட்சுமி துறை பாபு தலைமை தாங்கினர்.

    குன்னவாக்கத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சத்தியா, தென் மேல்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் கோவிந்தராஜ், புலிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் நிர்மலா அசோகன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை, ஒன்றிய குழு உறுப்பினர் அருள் தேவி, துணை தலைவர் குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாமல்லபுரத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "வளம் மீட்பு பூங்கா" குப்பை கிடங்கு உள்ளது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம், ஓட்டல்கள் குப்பைகளை மாமல்லபுரம் நுழைவு வாயிலில் சாலை ஓரங்களில் கொட்டி எரித்து வருகிறார்கள்.

    இதனால் மாமல்லபுரத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆட்டிசம் பாதிப்பால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது40). கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி கோடீஸ்வரி (32). இவர்களது 2½ வயது மகன் அரிகரசுதன். மேலும் இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

    பூபதியின் குழந்தை அரிகரசுதன் ‘ஆட்டிசம்’ எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையால் வாய்பேச முடியவில்லை. இதையடுத்து குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்தனர்.

    ஆக்குபே‌ஷன் தெரபி எனப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குழந்தையின் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இனி குழந்தை பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தையின் தாய் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    குழந்தை பேசாததால் அதன் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று கோடீஸ்வரி, குழந்தை அரிகரசுதனை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே எடுத்துச் சென்றார். அதன்பிறகு மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார். இதில் குழந்தை மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தது.

    குழந்தையை கொன்ற கோடீஸ்வரி பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டுக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கொன்று கோடீஸ்வரி தற்கொலை செய்தது தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது சகோதரி கோடீஸ்வரி மற்றும் அவரது குழந்தை அரிகரசுதன் ஆகியோர் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆட்டிசம் பாதிப்பால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் 3 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றை கலெக்டர் ராகுல் நாத் வழங்கி பாராட்டினார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குதல், பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுத்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட அளவில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய முதல் 3 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    இதில் முதல் பரிசாக தெய்வசிகாமணி என்பவருக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக திரைராஜ் என்பவருக்கு ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக கிறிஸ்து ராஜா என்பவருக்கு ரூ.5ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு சான்றை கலெக்டர் ராகுல் நாத் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சுரேஷ், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சாந்தா செலின் மேரி, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சிவகுமார் கலந்து கொண்டனர்.

    ×