என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த மாதம் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 2,371 கிளைகளில் ஒளிபரப்படுகிறது

    அடுத்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2,371 கிளைகளிலும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்து வருவதாக செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு :

    பிரதமர் மோடி ‘மனதில் குரல்’ என்ற தலைப்பில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டு மக்களிடம் கலந்துரையாடி வருகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு அரிய தகவல்கள், கருத்துக்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பகிரப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி அளவிலும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.

    மனதின் குரல் நிகழ்ச்சியின் 89-வது நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை நெடுங்குன்றத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் பார்த்தனர். இதில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன், லோகநாதன், செயலாளர் அரிபாபு, ஒன்றிய தலைவர் கிருஷ்ணராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மோடி விளக்கினார். 6-ம் நூற்றாண்டில் இருந்து தற்போதைய இ.நோட்டு வரை ரூபாய் நோட்டு வளர்ந்த விதத்தை ஒரு பெண்மணி தெரிவித்ததை அந்த பெண்ணுடன் உரையாடி விளக்கினார்.

    கணிதம் என்பது பாடத்திலும், வாழ்க்கை பாடத்திலும் தவிர்க்க முடியாதது. ஆனால் அதை மாணவர்கள் கடினமாக நினைப்பதை மாணவர்களுடன் உரையாடிய போது உணர்ந்து கொண்டதாகவும் அதே கணிதத்தை வேதகால அடிப்படையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மிக எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்க சொல்லி கொடுப்பதையும் அதை எப்படி கற்றுக்கொண்டார் என்பதையும் அவருடன் உரையாடி கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் பயனுள்ள இந்த நிகழ்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்ட பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் அடுத்த மாதம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். சவாலான இந்த பணியை மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் செய்து காட்ட வேண்டும் என்றார்.

    அவரது கட்டளையை ஏற்று அடுத்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2,371 கிளைகளிலும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்து வருவதாக செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×