என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்
    X
    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்

    சிறந்த விவசாயிகள் 3 பேருக்கு பரிசு- கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் 3 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றை கலெக்டர் ராகுல் நாத் வழங்கி பாராட்டினார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குதல், பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுத்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட அளவில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய முதல் 3 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    இதில் முதல் பரிசாக தெய்வசிகாமணி என்பவருக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக திரைராஜ் என்பவருக்கு ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக கிறிஸ்து ராஜா என்பவருக்கு ரூ.5ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு சான்றை கலெக்டர் ராகுல் நாத் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சுரேஷ், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சாந்தா செலின் மேரி, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சிவகுமார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×