என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூரில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு- அதிகாரிகள் நடவடிக்கை
வண்டலூர்:
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலை ஓரத்தில் பிரபலமான இரணியம்மன் கோவில் உள்ளது. அதன்பின் புறத்தில் அரசுக்கு சொந்தமான 1.75 ஏக்கர் கொண்ட நிலம் உள்ளது.
இதனை சிலர் ஆக்கிரமித்து ஓட்டல், கடை, வாட்டர் சர்வீஸ் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைத்து பல ஆண்டுகளாக வாடகை விட்டு இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அரசு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகத்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த் துறையினர் 3 பொக்லைன் எந்திரங்களால் ஆக்கிரமித்து கட்டி இருந்த ஓட்டல், எடை மேடை, 3 ஷெட், ஒர்க்ஷாப், டிங்கரிங், பெயிண்டிங், வாட்டர் சர்வீஸ், மெக்கானிக் கடை உள்ளிட்ட 9 கடைகளை அதிரடியாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






