என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மீன்சுருட்டி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வினோத்குமார் (வயது24). இவர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோழதரம் கோவிந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் அவருடன் சேர்ந்த இருவர் பாப்பாக்குடி வருவதற்காக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வினோத் குமார் என்பவர் வந்ததால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது
    • 200 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது.பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நாள்தோறும் விளையாட்டு பயிற்றுநர்களைக் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் கூடைப்பந்து, கால்பந்து,கையுந்துப் பந்து மற்றும், ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.15 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பயிற்சி நிறைவில் மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றதற்கான சான்றுகள் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் தெரிவித்தார்.

    • சித்திரை முழுநிலவு நாளையொட்டி கண்ணகி சிலைக்கு மரியாதை
    • தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    சித்திரை முழுநிலவு நாளையொட்டி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரே திருச்சி சாலையிலுள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் தமிழ் வழிகல்வி இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சொல்லாய்வு அறிஞர் மா.சொ.விக்டர் தலைமையில், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு அமைப்புச் செயலர் நல்லப்பன், உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் சௌந்தராஜன், தமிழ்வழி கல்வி இயக்க புலவர் அரங்கநாடன், தமிழ்க் களம் இளவரசன், புகழேந்தி, பாரிவள்ளல், செல்லபாண்டியன், சகானா காமராஜ், சோபனா பன்னீர்செல்வம், வழக்குரைஞர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • கோவில் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
    • அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகையும் திருட்டு போனது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் புது ஏரி மணக்கரை செல்லும் சாலையில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி மணி (வயது 57) தனது வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சன்னிதானத்தில் முன்பக்கம் பூட்டி இருந்த கேட் மற்றும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி, குண்டு காசு மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அரியலூர்,

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். செயலர் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். துணைத் தலைவர் ராஜீவ்காந்தி, இணைச் செயலர் தமிழ்ஒளி உள்ளிட்டோர் கலந்து கொண்டுடனர்.

    இதே போல், திருமானூரில் சங்கச் செயலர் ஷேக்தாவூத், செந்துறையில் மண்டலத் தலைவர் சிந்தனைச்செல்வி, ஜெயங்கொண்டத்தில் நிர்வாகி வெங்கடேசன், ஆண்டிமடத்தில் மாவட்ட இணைச் செயலர் பழனிசாமி கலந்து கொண்டனர். தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிடுவதுடன் அவர்கள் அனைவருக்கும் உடனடியாக உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தூய்மை பாரத இயக்க வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி உடனடியாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது
    • பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மகாபிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தார். இதுபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

    • நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
    • உழைப்பாளர் தினத்தையொட்டி நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெ.விரகாலூர், கள்ளூர், மற்றும் திருமானூர் போன்ற ஊர்களில் உழைப்பாளர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு, கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் குமார், தொகுதி செயலாளர் லெட்சுமணன், திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், அனைத்து மாவட்ட தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தீக்குளித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • தாய் இறந்த சோகத்தில் சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஆனந்தஜோதி. இவர்களுடைய மகள் செல்வி (வயது 17). இந்தநிலையில் உடல்நல கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தஜோதி சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வி கடந்த சில மாதங்களாக தாய் நினைவாக சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வி திடீரென வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதில், உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாய் இறந்த சோகத்தில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் பகுதியில் மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்த சேட்டு மனைவி கவிதா (வயது 46), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் மனைவி ஈஸ்வரி (50) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் தா.பழூர் அருகே உள்ள கோடாலி செல்லும் பிரிவு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அமிர்தராயக்கோட்டை காலனி தெருவை சேர்ந்த விஜயகுமார் (33) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 45 மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மளிகை கடையில் புகையிலை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் வி.கைகாட்டி அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்குள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்பிரிங்கியம் பாலக்கரையை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
    • பல்வேறு பொறுப்புகளுக்கு வேட்பு மனு

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல், சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா தலைமையில் தொடங்கியது. மாநில கொள்கை பரப்புச் செயலர் வந்தியத்தேவன் பங்கேற்று, மாவட்டக் கழகத்தில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெற்றார்.

    இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன்படி அரியலூர் மாவட்ட அவைத் தலைவராக ந.சகாதேவன், மாவட்டச் செயலாளராக க.ராமநா தன், பொருளாளராக வீர.புகழேந்தி, துணைச் செயலாளர்களாக க.கல்யாணகுமார், உஷாசெல்வம், கோ. பழனிவேல், சே.கலிஸ்துராஜ், தலைமை செயற்குழு உறுப்பினராக பெ.தங்கவேல் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களாக இ.இளவரசன், மோகன்தாஸ், சி.ஜெயபால், தங்கராசு, கொளஞ்சி(எ)சிவகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • இந்தியஜனநாக கட்சியின் 14-ம் ஆண்டு விழா நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

    அரியலூர்:

    அரியலூர் இந்தியஜனநாயக கட்சியின் 14-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அரியலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன், மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, மாவட்ட அமைப்பு செயலாளர் அருள்கணேசன், பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில துணை செயலாளர் கதிர்கணேசன், மாவட்ட தலைவர் யோகா கலியமூர்த்தி, மாநில மகளிரணி துணைசெயலாளர் பச்சையம்மாள், மாவட்ட பொறியாளர் அணி ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராசா, ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், ஒன்றிய தொழிலாளர் அணி சின்னதுரை, நகர மகளிரணி தீபா, மாவட்ட செய்தி தொடர்பாளர் அழகுசங்கர், ராமசாமி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×