என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பழனிவேல் ஓட்டினார். அந்த பஸ்சில் 23 பயணிகள் பயணம் செய்தனர். இதேபோல் திட்டக்குடியில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. 11 பயணிகள் பயணம் செய்த அந்த பஸ்சை டிரைவர் பார்த்தசாரதி ஓட்டி வந்தார். செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் முன்பு வந்தபோது அந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் 2 பஸ்களின் முன் பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. மேலும் பஸ்களில் பயணம் செய்த 5 பயணிகள் காயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பயணிகளில் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன், சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் சாலை வளைவின் ஓரத்தில் கட்டிட வேலைக்காக செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையில் வாகனங்களில் வருபவர்களுக்கு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு உயரமாக அந்த கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விபத்துக்கான காரணம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோமதி (வயது 37). இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் தனது மகளுடன் செந்துறைக்கு சென்றார். அப்போது கோமதியின் சேலை மொபட்டின் சக்கரத்தில் சிக்கியதில், அவர் கீழே விழுந்தார். இதையடுத்து கோமதியை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து வந்து கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் நடத்தினர்
    • சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக தமிழக அரசை உயர்த்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கில் சங்கம், அட்வகேட் அசோசியேசன் சங்கம் சார்பில் ஜாகி அமைப்பின் தலைவர் மீது தமிழக பார் கவுன்சில் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம்இயற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக தமிழக அரசை உயர்த்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கில் சங்க பொறுப்பாளர்கள் மனோகரன், முத்துகுமார், கொளஞ்சியப்பன் ,செல்வராஜ், மூத்த வக்கில் மணி, லெட்சுமிபதி, சுந்தரபாரதி, ஹரிபாஸ்கர், இராமகோவிந்தராஜன், தமிழரசன், ஆனந்தன், சுகுமார், அல்லி, தனலெட்சுமி, மூகாம்பிகை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தனம் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

    அரியலூர்,

    அரியலூர் அருகே வெங்கனூர், சன்னாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தனம். இவரது மகன் உதயகுமார். தனம் தனது மகளை வளர்மதி என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். தனது மருமகனுக்கு சொத்தில் பங்கு தரவேண்டும் என தனம் அடிக்கடி கூறிவந்துள்ளார்.இதனால் தனத்திற்கும் அவரது மகன்உதயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்ப ட்டு வ ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தனம் நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உதயகுமார் அவரை கீழே தள்ளி கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வாயில் பூச்சி மருந்தை உற்றியுள்ளார். வெங்கனூர் போலிசில் சென்று நாடகமாடி தாய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    வெங்கனூர் போலீசார் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தற்கொலை வழக்கு பதிவுசெய்து தனம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்து மனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தனம் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் வெங்கனூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, உரிய விசாரணைக்கு பின்னர் உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். தாயை கொலை செய்த குற்றத்திற்காக உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    • அரியலூரில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது
    • அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, சுபம் மறுவாழ்வு மையம் சார்பில் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அமர ஜோதி தலைமை வகித்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அனைவரிடமும் துண்டு பிரசுரங்க ளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறையினர், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    • அரியலூர்அரசு மருத்துவக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைடபெற்றது
    • முகாமுக்கு மாவட்ட முதன்மை குற்றவியில் நீதித்துறை நடுவர் சரவணன் தலைமை வகித்தார்

    அரியலூர்,

    அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை அனிதா கலைய ரங்கில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கேலி வதை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்பு ணர்வு முகாம் நடை பெற்றது. முகாமுக்கு மாவட்ட முதன்மை குற்றவியில் நீதித்துறை நடுவர் பி. சரவணன் தலைமை வகித்து, முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இந்தியா முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் தான் கேலி வதைச் சட்டம் அமல்ப டுத்தப்பட்டது. கேலிவதைச் செய்தது தெரியவந்தால் அவர்கள் சட்ட மூலம் கடு மையாக தண்டிக்க ப்படுவா ர்கள். எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் சகோத ரத்துடன் பழக வேண்டும் என்றார்.

    மருத்துவக் கல்லூரி துணை முதன்மையர் சிவா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவ அலுவலர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வழக்குரைஞர் சங்கத் தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறையின் சட்ட ஆலோசகர் வழ க்குரைஞர் பகுத்தறிவாளன் மற்றும் வழக்குரைஞர் சவரி ஆனந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக முதுநிலை குடிமையியல் மருத்துவர் டி.கண்மணி வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி நன்றி தெரிவித்தார்.


    • தொடர் கொள்ளை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் நகரில் ஜே.ஜே.நகர் எழில் என்பவர் வீட்டில் குடும்பத்துடன்வெளியூர் சென்றிருந்த போது, அவரின் வீட்டு பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம்கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல பெரியார்நகரில் வசிக்கும் கீதா என்பவர் வெளியூர் சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து நகைபணம் கொள்ளையடிக்கப்பட்டது. அரியலூரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மாவட்ட போலிஸ் எஸ்பி பெரோஸ்கான்அப்துல்லா உத்தரவின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ராஜவேல்மற்றும் நந்தகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் பாரதிதாசன் நகரை சார்ந்த கலியமூர்த்தி மகன் கோகுல் (26) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இவர் மீது அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை முயற்ச்சி, திருட்டு போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவநீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினார்கள், நீதிபதி (பொ) கற்பகவள்ளி கோகுலை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோகுல், கர்நாடகா மாநிலம் பெங்களுரில் சட்டபடிப்பு படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன்-மனைவி போன்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • பாலமுருகனுக்கு, அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை கிராமம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 26) ஆண்டிமடம் விளந்தை தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர்கள் இருவரும் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் ஒன்றாக படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருச்சியில் வெவ்வேறு கல்லூரிகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தனர். அப்போதும் இருவரும் பழகி வந்தனர். பின்னர் படிப்பு முடிந்து வேலை தேடி சென்னை சென்றனர்.

    அங்கு இரு வேறு நிறுவனங்களில் தமிழ்செல்வியும், பாலமுருகனும் வேலை பார்த்து வந்தனர்.

    ஆனால் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன்-மனைவி போன்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பாலமுருகனுக்கு, அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார் மேலும் காதலி தமிழ் செல்வியிடம் நான் பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் நீயும் வேறு பையனை திருமணம் செய்து கொண்டு போய்விடு என தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.

    இதைக் கேட்டு தமி ழ்ச்செல்வி அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பாலமுருகனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் குறித்த குறைதீர் கூட்டம் 4 கிராமங்களில் நடக்கிறது.
    • கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் விவரங்கள் வருமாறு:- அரியலூர் தாலுகாவிற்கு சென்னிவனம் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் தென்கச்சிப்பெருமாள்நத்தத்திலும், செந்துறை தாலுகாவில் நமங்குணத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் காட்டாத்தூரிலும் (தெற்கு) ஆகிய 4 கிராமங்களில் மேற்கண்ட முகாம் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம், என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • ஏரியில் பிணமாக மிதந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் கலியமூர்த்தி(வயது 42). தொழிலாளியான இவர் ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • பூக்கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42) இவர் உடையார்பாளையம் பஸ்ஸ்டாப் அருகே பூக்கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் நேற்றுமுன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்
    • காரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர் :

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் வெற்றிச்செல்வன்(வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் அடிக்கடி இவரது நண்பரை பார்க்க அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சென்று பார்த்து வரும்போது, அங்கு டிப்ளமோ படிக்கும் 20 வயதுடைய மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் அதிகமாகி காதலாக மாறியது. மேலும் வெற்றிச்செல்வன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த பெண் வெற்றிச்செல்வனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் அப்பகுதி சிறிய கோவிலில் வைத்து இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் சென்னை செல்வதாக கூறி சென்றவர் குழந்தை பிறந்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய போது பதில் அளிக்கவில்லை. அந்த பெண் வெற்றிச்செல்வனுக்கு தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு உள்ளார் இருப்பினும் பதிலளிக்கவில்லை. ஒரு சில முறை பேசும்போது வெற்றிச்செல்வன் தன்னிடம் பேசினால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வெற்றிச்செல்வன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×