என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
- அரியலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் நடத்தினர்
- சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக தமிழக அரசை உயர்த்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கில் சங்கம், அட்வகேட் அசோசியேசன் சங்கம் சார்பில் ஜாகி அமைப்பின் தலைவர் மீது தமிழக பார் கவுன்சில் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம்இயற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக தமிழக அரசை உயர்த்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கில் சங்க பொறுப்பாளர்கள் மனோகரன், முத்துகுமார், கொளஞ்சியப்பன் ,செல்வராஜ், மூத்த வக்கில் மணி, லெட்சுமிபதி, சுந்தரபாரதி, ஹரிபாஸ்கர், இராமகோவிந்தராஜன், தமிழரசன், ஆனந்தன், சுகுமார், அல்லி, தனலெட்சுமி, மூகாம்பிகை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






