என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் கொள்ளை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் கைது
- தொடர் கொள்ளை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யபட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்:
அரியலூர் நகரில் ஜே.ஜே.நகர் எழில் என்பவர் வீட்டில் குடும்பத்துடன்வெளியூர் சென்றிருந்த போது, அவரின் வீட்டு பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம்கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல பெரியார்நகரில் வசிக்கும் கீதா என்பவர் வெளியூர் சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து நகைபணம் கொள்ளையடிக்கப்பட்டது. அரியலூரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மாவட்ட போலிஸ் எஸ்பி பெரோஸ்கான்அப்துல்லா உத்தரவின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ராஜவேல்மற்றும் நந்தகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் பாரதிதாசன் நகரை சார்ந்த கலியமூர்த்தி மகன் கோகுல் (26) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை முயற்ச்சி, திருட்டு போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவநீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினார்கள், நீதிபதி (பொ) கற்பகவள்ளி கோகுலை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோகுல், கர்நாடகா மாநிலம் பெங்களுரில் சட்டபடிப்பு படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






