என் மலர்
அரியலூர்
செந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொன்குடிக்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது 10), மகன் கிரிதரன் (8). இருவரும் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை அக்காளும், தம்பியும் வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது வெயில் நேரம் என்பதால் பிருந்தா தனது தம்பியை அழைத்துச்சென்று குளத்தின் கரையில் குளித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கு ஏற்கனவே ஆழமாக வெட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் வழுக்கி விழுந்த சிறுவன் கிரிதரன், தண்ணீரில் மூழ்கி உள்ளான். இதனைக்கண்ட பிருந்தா தம்பியை காப்பாற்ற முயன்றாள். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர்.
இதனை அவ்வழியே அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் பார்த்து விட்டார். அவர் உடனே பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, 2 பேரையும் குளத்தில் இருந்து மீட்டு பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கே டாக்டர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் நீண்டநேரம் போராடியும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதனைத்தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொன்குடிக்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமழப்பாடி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கனகசபை. இவர் கீழையூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 18-ந்தேதி கனகசபை பணியில் இருந்த போது, அவரது முதல் மனைவியின் மகன்களான கலைச்செல்வன் (வயது 27), கலைவாணன்(20) ஆகிய 2 பேர் சேர்ந்து ஜீவனாம்சம் வழங்க மறுத்தாக கூறி கனகசபையை கழுத்தறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வன், கலைவாணன் ஆகியோரை கைது செய்து ஜெயங் கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமாருக்கும், அவரது சித்தியான தேன்மொழி குடும்பத்தினருக்கும் பொதுவான கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தேன் மொழியின் மகன் விக்னேஷ் (20) தனது குடும்பத்தினருடன் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டார். அப்போது விக்னேஷ் அரிவாளால் செந்தில்குமாரின் அண்ணன் மணிகண்டன் மற்றும் அமரமூர்த்தி ஆகியோரை வெட்டியதில், அவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக விக்னேசை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமம் கீழவேந்தன் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தராஜ்(44). இவர் சம்பவத்தன்று வனத்து சின்னப்பர் கோவில் கொள்ளிடம் ஆற்றுக் கரையில் விஷத்தன்மையுள்ள சாராயம் தயாரிக்க 540 லிட்டர் ஊறல் போட்டிருந்தார். மேலும் 20 லிட்டர் சாராயம் தயாரித்து வைத்திருந்தார். இதனை கண்டுபிடித்த வெங்கனூர் போலீசார் சாராய ஊறலையும், சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் அமிர்தராஜை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சிறையில் இருக்கும் 4 பேரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இது தொடர்பாக கலெக்டரிடம் மேற்பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ரத்னா சிறையில் உள்ள 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங் கொண்டம் கிளை சிறையில் இருந்த கலைச் செல்வன், கலைவாணன், விக்னேஷ், அமிர்தராஜ் ஆகிய 4 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டதற்காக உத்தரவின் நகலை போலீசார் வழங்கி, அவர்கள் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

உடையார்பாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் கடைவீதியில் 2 வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவாறு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்ததாக உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 22), ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மனோ(22) என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே கல்லடிக்குட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராசு(வயது 48) என்பவர் காட்டகரம் ஏரிக்கரை அருகே மதுபானம் விற்றுக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வராசை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆயுதக்களம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(61). இவர் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள கருவாட்டு ஓடை அருகே மதுபானம் விற்றுக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் தத்தனூர் பொட்டகொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(63) என்பவர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அன்பழகனை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

மீன்சுருட்டி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே கல்லடிக்குட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராசு(வயது 48) என்பவர் காட்டகரம் ஏரிக்கரை அருகே மதுபானம் விற்றுக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வராசை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆயுதக்களம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(61). இவர் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள கருவாட்டு ஓடை அருகே மதுபானம் விற்றுக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் தத்தனூர் பொட்டகொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(63) என்பவர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அன்பழகனை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர்:
கொரானா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியில் இருந்து ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் நேற்று முதல் நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் மதுரையில் இருந்து விழுப்புரம் வரை தினந்தோறும் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பயணத்தை தொடங்கியது. அரியலூர் ரெயில் நிலையத்தில் 12 பயணிகள் விழுப்புரம் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தினர்.
ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த 10 பயணிகள் கிருமி நாசினி (சானிடைசர்) மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல்நிலை பரிசோதனையை ரெயில்வே நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனையடுத்து ரெயில்வே போலீஸ் அதிகாரி சவரிமுத்து தலைமையில், போலீசார் பயணிகளை சமூக இடைவெளிவிட்டு ரெயில் வரும் பிளாட்பாரத்திற்கு அழைத்து சென்று சமூக இடைவெளி விட்டு அமரச்செய்தனர். அரைமணி நேரம் தாமதமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் அனைவரும் ஏற்றிவிடப்பட்டனர்.
இதுபோன்று மதுரை, திண்டுக்கல், மற்றும் திருச்சியில் இருந்து அரியலூருக்கு வருகை தந்த 52 பயணிகளும் சமூக இடைவெளியுடன் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் பயணச்சீட்டு மற்றும் இ-பாஸ் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள ரெயில் சேவை மூலம் தங்களது பணிகளுக்கு திரும்ப முடிகிறது என்று ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் ரெயில் நிலையங்களில் சுகாதார முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் நாள் என்பதால் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ளது என்றும், நாளடைவில் அதிக அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
செந்துறை:
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 25). இவர், 16 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து, பட்டிகுளம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சக்தி மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலைக்கடம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் காட்டுராஜா (வயது 37). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமியின்(52) குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குருசாமி, ரவிச்சந்திரன்(56), அரவிந்த்(22), அரியான் என்கிற அகிலன் (26), கபிலன்(25) ஆகிய 5 பேர், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை மற்றும் கத்தி ஆகியவற்றுடன் காட்டு ராஜாவின் குடும்பத்தினரை தாக்கினர்.
இந்த கொலைவெறி தாக்குதலில் காட்டுராஜா, அவரது தந்தை கந்தசாமி, மனைவி கவிதா, தம்பியின் மாமியார் ஆண்டாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் தஞ்சை, அரியலூர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக செந்துறை போலீசார் வழக்குப்பதிந்து குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் ஆகிய 5 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிழவேந்தன் தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் வினீத் என்ற வெலிங்டன்(23). பிரபல ரவுடியான இவர் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களை தொடர்ந்து வழிமறித்து திட்டியும், பணம் கேட்டும் மிரட்டி வந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி மாதா கோவிலை சேர்ந்தவர் சிவக்குமார்(42). இவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, அதில் போதை பொருளை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார். திருமானூர் போலீசார் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இந்தநிலையில் கலெக்டர் ரத்னா, அவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் மற்றும் வினீத், சிவக்குமார் ஆகிய 7 பேரிடமும் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக நகலை போலீசார் வழங்கினர். பின்னர் அவர்கள் 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே, அரியலூர் மாவட்டத்தில் 31 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 29). எம்.எஸ்.சி., பி.எட் படித்துவிட்டு விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே தெருவில் வசிக்கும் தர்மராஜ்(44) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் தனது தாத்தா கருப்பையாவை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு விளந்தை திலகர் நகர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்மராஜ், ஆனந்தராஜ் வாகனத்தை வழிமறித்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் காயமடைந்த ஆனந்தராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற்றை மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் சுரங்கம் உள்ளது. இங்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 161 விவசாயிகளிடம் இருந்து 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நிலம் கொடுத்த அவர்களுக்கு சிமெண்டு ஆலையில் வேலை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இது நாள் வரை நிலம் கொடுத்த ஆனந்தவாடி விவசாயிகளுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், விரக்தி அடைந்த நிலம் கொடுத்த விவசாயிகள், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக குற்றம் சாட்டியதோடு தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும் என்று கோரி ஆனந்தவாடியில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம் முன்பு சாலையை மறித்து பந்தல் அமைத்து தங்களது கழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்சுருட்டி அருகே தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). இவர் கடந்த 26-ந் தேதி தனது காரில் சொந்த வேலையாக காடுவெட்டி கிராமத்திற்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, டயர் வெடித்து சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி சேதமடைந்தது. கார் சேதமானது குறித்து குடும்பத்தினர் கேள்வி கேட்பார்களே என்று வருத்தப்பட்ட ராம்குமார் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராம்குமாரின் தந்தை குமரன் கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், கொரோனா வைரசால் ஏற்கனவே 357 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 355 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 2 பேரில், ஒருவர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் சென்னை முகப்பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து அரியலூர் திரும்பிய 24 வயதுடைய ஆண் ஒருவருக்கும், சென்னையில் இருந்து ஊர் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 23, 22 வயதுடைய சகோதரர்களுக்கும், 42 வயதுடைய ஒருவருக்கும் மற்றும் 18 வயதுடைய பெண்ணுக்கும் என மொத்தம் 5 பேருக்கு கடந்த 23-ந் தேதி சுகாதாரத்துறையினரால் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன் முடிவு நேற்று வந்ததில், அவர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் 42 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 139 பேரில், 138 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர். இதில் பிரசவித்த பெண் ஒருவர் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் 27 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.