search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மீன்சுருட்டி அருகே மது விற்ற 3 பேர் கைது

    மீன்சுருட்டி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே கல்லடிக்குட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராசு(வயது 48) என்பவர் காட்டகரம் ஏரிக்கரை அருகே மதுபானம் விற்றுக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வராசை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஆயுதக்களம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(61). இவர் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள கருவாட்டு ஓடை அருகே மதுபானம் விற்றுக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் தத்தனூர் பொட்டகொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(63) என்பவர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அன்பழகனை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×