என் மலர்
அரியலூர்
கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய மாடுகளை கரை சேர்த்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உதவிக்கு வந்த விவசாயிகள், அவர்களை சரியாக வழிநடத்திய அதிகாரி அம்பிகா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகளின் மாடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மேய்ச்சலில் ஈடுபட்டு திரும்புவது வழக்கம். அதன்படி ஆற்றின் நடுத்திட்டு பகுதிக்கு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுக்கு காவிரி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் கரைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து விவசாயிகள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் அங்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதவை படகு மூலம் மாட்டின் உரிமையாளர்களை நடுத்திட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கிருந்து கரைப் பகுதியை நோக்கி மாடுகளை விரட்டினர். ஆனால் தண்ணீர் அதிக அளவு சென்றதால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கே திரும்புவதற்கு முயற்சித்தன. இதனால் அவற்றை மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அம்பிகா தலைமையில் ஆற்றின் கரையில் இருந்து நடுத்திட்டு பகுதிக்கு மிதவை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் கொண்ட 50 பேர் அடங்கிய குழுவினர் சென்றனர். அவர்கள், மாடுகளை மீண்டும் தண்ணீரில் இறக்கி கோடாலிகருப்பூர் கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கு சென்றன.
இதையடுத்து தீயணைப்பு வீரர் முத்துகுமார், ஒரு மாட்டை தன்னோடு அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி நீச்சல் அடித்து கோடாலிகருப்பூர் கரையை நோக்கி வரத் தொடங்கினார். அந்த மாட்டை தொடர்ந்து மேலும் சில மாடுகள் வரத் தொடங்கின. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் முதலில் சென்ற மாடு சோர்ந்து விடாமல் இருக்க தீயணைப்பு வீரர் முத்துக்குமார் அந்த மாட்டை தட்டிக்கொடுத்து கரையை நோக்கி அழைத்து வந்தார். முதல் கட்டமாக 28 மாடுகள் கரைக்கு வந்து சேர்ந்தன.
இதைப் பார்த்த சில மாட்டு உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாடுகளை அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி மாடுகளை கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டாவது கட்டமாக 37 மாடுகள் கரை சேர்ந்தன. முடிவில் மீதமிருந்த 3 மாடுகளையும் மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர்.
இதையடுத்து மாடுகளை கரை சேர்த்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உதவிக்கு வந்த விவசாயிகள், அவர்களை சரியாக வழிநடத்திய அதிகாரி அம்பிகா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர். மீட்புக்குழுவினருக்கான உதவிகளை ஊராட்சி தலைவர் இளங்கோவன் செய்தார். தீயணைப்பு வீரர்களுக்கு மாடுகளின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகளின் மாடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மேய்ச்சலில் ஈடுபட்டு திரும்புவது வழக்கம். அதன்படி ஆற்றின் நடுத்திட்டு பகுதிக்கு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுக்கு காவிரி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் கரைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து விவசாயிகள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் அங்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதவை படகு மூலம் மாட்டின் உரிமையாளர்களை நடுத்திட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கிருந்து கரைப் பகுதியை நோக்கி மாடுகளை விரட்டினர். ஆனால் தண்ணீர் அதிக அளவு சென்றதால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கே திரும்புவதற்கு முயற்சித்தன. இதனால் அவற்றை மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அம்பிகா தலைமையில் ஆற்றின் கரையில் இருந்து நடுத்திட்டு பகுதிக்கு மிதவை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் கொண்ட 50 பேர் அடங்கிய குழுவினர் சென்றனர். அவர்கள், மாடுகளை மீண்டும் தண்ணீரில் இறக்கி கோடாலிகருப்பூர் கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கு சென்றன.
இதையடுத்து தீயணைப்பு வீரர் முத்துகுமார், ஒரு மாட்டை தன்னோடு அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி நீச்சல் அடித்து கோடாலிகருப்பூர் கரையை நோக்கி வரத் தொடங்கினார். அந்த மாட்டை தொடர்ந்து மேலும் சில மாடுகள் வரத் தொடங்கின. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் முதலில் சென்ற மாடு சோர்ந்து விடாமல் இருக்க தீயணைப்பு வீரர் முத்துக்குமார் அந்த மாட்டை தட்டிக்கொடுத்து கரையை நோக்கி அழைத்து வந்தார். முதல் கட்டமாக 28 மாடுகள் கரைக்கு வந்து சேர்ந்தன.
இதைப் பார்த்த சில மாட்டு உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாடுகளை அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி மாடுகளை கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டாவது கட்டமாக 37 மாடுகள் கரை சேர்ந்தன. முடிவில் மீதமிருந்த 3 மாடுகளையும் மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர்.
இதையடுத்து மாடுகளை கரை சேர்த்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உதவிக்கு வந்த விவசாயிகள், அவர்களை சரியாக வழிநடத்திய அதிகாரி அம்பிகா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர். மீட்புக்குழுவினருக்கான உதவிகளை ஊராட்சி தலைவர் இளங்கோவன் செய்தார். தீயணைப்பு வீரர்களுக்கு மாடுகளின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, சதத்தில் சதம் அடிப்பாரா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும், ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களும் அடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள், ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் என 100 சதங்கள் விளாசியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா? என்றால், அது சந்தேகமே...
ஆனால், தற்போதைய இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது அபாரமான ஆட்டத்தால் சதமாக குவித்து வந்தார். இதனால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என நம்பப்பட்டது.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள், டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள் என 70 சதங்கள் அடித்துள்ளார். 70-வது சதத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடித்தார். அப்போது விராட் கோலிக்கு 31 வயது. சூப்பர் டூப்பர் ஃபார்மில் இருந்தார்.
இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடினால் எப்படியும் எளிதாக 100 சதங்கள் அடிப்பார் என்ற நிலையில்தான் விராட் கோலி ஆட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால், 2019-ல் இருந்து தற்போது வரை அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது.

தற்போது 33 வயதை கடந்துள்ளார். இதனால் விராட் கோலியால் 100 சதங்களை எட்ட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியை துறந்துள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. அதன்பின் பேட்டிங்கில் தீவர கவனம் செலுத்தினால் 100 சதங்களை எட்ட வாய்ப்புள்ளது.
மழையால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமலும், வயல் வேலை செய்ய முடியாமலும் தவித்தனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வருத்தத்தில் இருந்தனர். வேலைக்கு வெளியூர் செல்ல முடியாமல் தொழிலாளர்களும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாமலும் பொதுமக்களும் தவித்தனர்.
மேலும் மழையால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வயல்வெளிகள், முந்திரி தோட்டங்கள் மற்றும் நிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கனமழையால் அனைத்து ஏரிகளும் கரையை ஒடைத்துக்கொண்டு ஓட தொடங்கியதால், சாலைகளிலும், வயல்வெளிகளில் மற்றும் தோட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் மட்டுமின்றி கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, பருக்கள், காடுவட்டாங்குறிச்சி, நடுவலூர், கோட்டியால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் அப்பகுதிகளில் மழை பெய்தது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் வகையில் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரெயில்வே துறை பயணிகளுக்கான ரெயில்களை இயக்கி வருகிறது. தனியார் நிறுவனங்களிடம் சில ரெயில்களை ஒப்படைக்க ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சுற்றுலா ரெயில்களை இயக்கி வருகிறது.
அந்த வகையில் பாரத் கவுரவ் என்ற பெயரில் ரெயில்களை இயக்க ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது என மத்திய ரெயில்வே துறைஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக 190 ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 3,033 பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ள ரெயில்வேதுறை, ரெயில்களில் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் உணவு வழங்கும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 28 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தலா 4 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 28 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தலா 4 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 28 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53,128 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 87 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 128 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 52,216 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 505 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 407 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலியானதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியமுத்து (வயது 55), கூலி தொழிலாளி. இவரது மகள் அஞ்சம்மாள் பிரசவத்திற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த வாரம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் முனியமுத்து தனது மற்றொரு மகளான மகாராணியுடன் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ள தனது மகளை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அஸ்தினாபுரம் அருகே வரும்போது எதிரில் அதிவேகமாக வந்த தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான டிப்பர் லாரி மோதியதில் முனியமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த மகாராணி ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சிமெண்டு ஆலை கனரக வாகனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் இரவு 7 மணி வரை போராட்டம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலத்தின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி தொடர்பான எங்கள் நோக்கம் திரித்து, தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
அமராவதி:
ஆந்திராவில் ஜெகன் மொகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார். நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டினமும், சட்டப்பேரவைக்கு அமராவதியும், நீதித்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான சட்ட மசோதா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
3 தலைநகர திட்டத்துக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில், 3 தலைநகரை உருவாக்கும் சட்டத்தை ரத்து செய்ய ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி சட்டசபையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-
ஆந்திராவில் தலைநகரை பரவலாக்கம் செய்வது மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்பினோம். எனினும் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை அரசு திரும்ப பெறுகிறது. எந்த தவறும் இல்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம்.
மாநிலத்தின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி தொடர்பான எங்கள் நோக்கம் திரித்து, தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சட்டரீதியாக தடைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன
எங்கள் உண்மையான எண்ணம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விளக்கி, புதிய மசோதாவில் தேவையான மாற்றங்கள் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 6 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 288 ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. 987 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் 6 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் 613.38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரி மழை அளவை காட்டிலும் கூடுதலாக 22 சதவீதமாக கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தற்போது வரை 1,336.84 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் 2,477 ஏரி மற்றும் குளங்களில் 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
உடையார்பாளையம் தாலுகாவில் சுத்தமல்லி, பொன்னேரி அணைக்கட்டுகள் உள்ளன. மழை காரணமாக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் 2 நாட்களுக்கு முன்பு உபரிநீர் திறந்து விடப்பட்டது. வாரணவாசியில் ஓடும் மருதையாறில் முழுமையாக நீர் செல்கிறது. திருமானூரில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் இருகரையை தொட்டபடி செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் முழுமையாக நீர் செல்வதால் பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
மேலும், 226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் தற்போது 211.05 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்போது வினாடிக்கு 256 கன அடி நீர் நீர்த்தேக்கத்திற்கு வருகிறது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114.45 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போது வரை 94.50 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது சித்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரியில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகளின் அருகே யாரும் செல்ல வேண்டாம். தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்தில் 987 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 655 குடிசை வீடுகள் பகுதியாகவும், 20 குடிசை வீடுகள் முழுமையாகவும், 300 ஓடு மற்றும் இதர வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. வீடு ேசதமடைந்ததற்கு நிவாரணமாக இதுவரை 184 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 56 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மழையின் காரணமாக உயிரிழந்த 9 கால்நடைகளுக்கு ரூ.80 ஆயிரமும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் நிவாரணமாகவும் என மொத்தம் 645 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 90 ஆயிரத்து 300 நிவாரணமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 342 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 217.55 எக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 56.68 எக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு பயிர்களும், 14.24 எக்டேர் பரப்பளவில் பருப்பு வகை பயிர்களும், 1,588.18 எக்டோர் பரப்பளவில் பருத்தி பயிரும் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 524 எக்டேர் நெற்பயிரும், 80 எக்டேர் சோளம், கம்பு பயிர்களும், 301 எக்டேர் பருப்பு வகை பயிர்களும், 6 எக்டேர் கரும்பு பயிர்களும், 7.40 எக்டேர் எண்ணெய்வித்து பயிர்களும், 4003 எக்டேர் பருத்தி பயிர்களும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. மழைநீர் வடிவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
தற்போது மேட்டூருக்கு அதிக அளவில் உபரிநீர் வருவதால், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு திருச்சி அருகே உள்ள முக்கொம்பில் இருந்து உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் இன்னும் 50 ஆயிரம் கனஅடி அளவிற்கு உயர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கலந்து விடுகிறது.
பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான கரைவெட்டி ஏரி, வேட்டக்குடி ஏரி, மானேரி, பளிங்காநத்தம் ஏரி, சுக்கிரன் ஏரி அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. அனைத்து ஏரிகளிலும் கரை காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் நீர் வயல்களில் தேங்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாதத்தோடு மழையின் தாக்கம் குறைந்தால் இந்த வருடம் கரும்பு, நெல் மற்றும் மற்ற பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்றும், யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை சரி செய்து கொடுத்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டதையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் அரவிந்த் (வயது 18). துரைராஜ் சரக்கு ஆட்டோவில் ஓட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இதற்கு அரவிந்தன் துணையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றிற்கு மின்மோட்டாரை இயக்கி அரவிந்த் குடிநீர் வினியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை காலனி தெருவை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி துர்காதேவி(32). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2 நாட்களாக அளவுக்கு அதிகமாக திருமுருகன் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இது பற்றி துர்காதேவி கேட்டபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வெண்ணங்குழி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்ற திருமுருகன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக துர்காதேவிக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அருகில் இருந்தவர்கள் திருமுருகனை மீட்டு மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு திருமுருகனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து துர்காதேவி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிரியங்கா காந்தி விசாரணை அமைப்புகளை நம்பவில்லை என்றால், யாரை நம்புகிறார் என்று தெரியவில்லை என காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் கூறினார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங், கட்சி தலைமை குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செயல்பாடு குறித்து அதிதி சிங் கூறியதாவது:-
லக்கிம்பூர் வன்முறை மற்றும் பிற பிரச்சினைகளைப் பொருத்தவரை, பிரியங்கா காந்தி எப்போதும் அதை அரசியலாக்கினார். லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றம் அதை கவனத்தில் கொண்டுள்ளது. பிரியங்கா காந்தி விசாரணை அமைப்புகளை நம்பவில்லை என்றால், யாரை நம்புகிறார் என்று தெரியவில்லை.
மசோதாக்கள் கொண்டு வரப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு பிரச்சினையாக இருந்தது. சட்டங்கள் (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்யப்பட்டபோதும் பிரச்சினையாக இருக்கிறது. அவருக்கு என்னதான் வேண்டும்? அவர் தெளிவாக சொல்ல வேண்டும். அவர் இந்த விஷயத்தை மட்டுமே அரசியலாக்குகிறார். இப்போது அரசியல் செய்ய வேண்டிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அடுத்த பிரச்சனையை கையில் எடுத்தார் பிரியங்கா காந்தி. விவசாயிகள் மீது பிரதமருக்கு உண்மையில் அக்கறை இருந்தால், லக்கிம்பூர் கேரி வழக்கில் உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், டிஜிபிக்கள் மாநாட்டில் அவருடன் மேடையைப் பகிரக் கூடாது என பிரியங்கா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.






