என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர் மாவட்டத்தில் 314 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி

    அரியலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 314 சிலைகள் பிரஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர்திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும்,விநாயகர் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.

    அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்த ஆண்டு 3 முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    கீற்று கொட்டகையை தவிர்த்து தகரத்தால் ஆன தகடுகள் அமைத்த கொட்டகையில் தான் சிலைகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்ததந்த பகுதி இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • வரும் 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
    • ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

    அரியலூர்:

    அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற ஆட்சியரின் ஆய்வு கூட்டத்தை ஊரக வளர்ச்சித் துறையினர் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், பொறியாளர் சித்ரா ஆகியோரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்ததற்காக பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரனுக்கு மீண்டும் அதே பணியிடத்தில் பணி வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17 (அ) , 17 (ஆ) குற்றச்சாட்டு குறிப்பாணிகளை ரத்து செய்ய வேண்டும். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை வருகை பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதிக்காதற்கும், ஊதியப்பட்டிலை கருவூலத்திற்கு அனுப்பாததற்கும் கண்டனம் தெரிவிப்பது.

    மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் வளர்ச்சித் துறை ஊழியர்களை ஒருமையிலும், பண்பில்லாமலும் தடித்த வார்த்தைகளில் பேசி, மன உளைச்சலை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து 30 -ந் தேதி நடைபெறும் ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மைய செயற்குழு கூட்டத்தில் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் என 100 க்கும் மேற்பட்ட வளர்ச்சி துறை ஊழியர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறதா பட்சத்தில், ஏற்கனவே செயற்குழுவில் நிறைவேற்ற தீர்மானத்தின் படி வரும் 14 ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும், 28 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.

    • அரியலூரில் அரசு கலை கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் கீழ் தூய்மை பணி தொடங்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூரில் அரசு கலை கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் கீழ் தூய்மை பணி தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    குப்பைகளை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வீடுகளை தூய்மையாக பராமரிப்பதுபோல், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

    வருகிற தலைமுறையை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், அந்தந்த துறை சார்ந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

    • விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஈஸ்வரி வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி(வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

    இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    • ஆண்டிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து தலைமையில் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஒன்றிய துணைத் தலைவர் வைத்தி தேன்மொழி முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆண்டிமடம் தாலுக்கா உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் ஒரு லட்சம் 25ஆயிரம் வாக்காளர்கள் உள்ள தாலுகாவில் மக்கள் பயன்பெறும் விதமாக ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிமடத்தில் தாலுக்கா நீதிமன்றம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அழகாபுரத்தில் இருந்து ஓலையூர் செல்லும் சாலையை பேருந்து போக்குவரத்து வழித்தடம் என்பதால் இந்த இந்த சாலையை ஊராட்சி ஒன்றிய இதயத்திற்கு உட்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்து நெடுஞ்சாலை துறை மூலம் தரமான சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு கவுன்சிலரும் அவர்கள் உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசு வீட்டு வரி, சொத்துரி, மின் கட்டணம் ரத்து செய்ய கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஜெயங்கொண்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமையில் 27 பேரும், தா.பழூரில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் மறியல் ஈடுபட்ட 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதி, தா.பழூர் கடை வீதியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகளை உயர்த்தி 27 லட்சம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்ததாக மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு வீட்டு வரி, சொத்துரி, மின் கட்டணம் ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த எட்டு ஆண்டுகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்கள் விலை பல மடங்கு உயர்வு. அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகிய உணவு பண்டங்கள் மீது போடப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இறந்த பிணத்தின் இறுதி சடங்குகளுக்கு போடப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    வேலையின்மை, வருவாய் இழப்பு சூழலில் அதானி, அம்பானி குடும்ப நிறுவனங்களுக்கு மட்டும் கோடி கோடியை கொள்ளை லாபம் ஈட்ட வரி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமையில் 27 பேரும், தா.பழூரில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் மறியல் ஈடுபட்ட 29 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர்.

    • பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.
    • பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல்குடிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிகூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு பயிற்சியாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

    வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். பள்ளி தலைவர் வளர்மதி பயிற்சி பற்றி விளக்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது,

    பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்,

    பள்ளியின் செயல்பாடுகளை கண்காணித்து மற்றும் மாணவருடைய கற்றல் திறனை கவனித்து அதற்கேற்ற கற்றல் சூழல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

    • "குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
    • 2-ந் தேதி தொடங்குகிறது.

    அரியலூர்

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வருகிற 2-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவ-மாணவிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமுருகன்(வயது 38). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மனம் உடைந்த அவர் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்த முனுசாமியின் மகன் கோகுல்ராஜ்(வயது 32). கடந்த ஜூலை மாதம் கோகுல்ராஜ் மற்றும் சிலர் கஞ்சா வியாபாரம் செய்தபோது போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். இதில் கோகுல்ராஜ் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து கோகுல்ராைஜ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோகுல்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள கோகுல்ராஜிடம் வழங்கப்பட்டது.

    • காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
    • வசந்தின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகன் வசந்த்(வயது 22). இவரும், அதே தெருவை சேர்ந்த செல்வராஜின் மகள் ஆர்த்தியும்(19) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆர்த்தி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆர்த்தியின் பெற்றோரிடம் பெண் கேட்டதாகவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்த்தியை வசந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்தியாதோப்பு தீப்பாஞ்சம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் நேற்று ஊருக்கு வந்துள்ளனர். அப்போது பெற்றோர்களுக்கு பயந்து அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்த்தியின் பெற்றோர் வர மறுத்து விட்டனர். இந்நிலையில் வசந்தின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தனர். இதையடுத்து போலீசார் அறிவுரைகள் கூறி காதல் திருமண ேஜாடியை வசந்தின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது
    • தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்தது

    அரியலூர்:

    தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி, வாலிபால் மற்றும் தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து, போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், யாராக இருந்தாலும் விடா முயற்சியும், தன்னமைக்கையுடன் செயல்பட்டால் எளிதில் வெற்றிப் பெறலாம் என்றனர்.

    தொடர்ந்து அவர்கள், ஏற்கனவே குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கினர்.

    போட்டிகளில், அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் இருந்து மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு அன்று மாலை பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு நல அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    ×