என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
- மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது
- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்தது
அரியலூர்:
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி, வாலிபால் மற்றும் தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து, போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், யாராக இருந்தாலும் விடா முயற்சியும், தன்னமைக்கையுடன் செயல்பட்டால் எளிதில் வெற்றிப் பெறலாம் என்றனர்.
தொடர்ந்து அவர்கள், ஏற்கனவே குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கினர்.
போட்டிகளில், அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் இருந்து மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு அன்று மாலை பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு நல அலுவலர் லெனின் செய்திருந்தார்.






