என் மலர்
அரியலூர்
- மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி உயிரிழந்தார்.
- தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தவர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 53). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தற்று வயிற்று வலி அதிகமாகவே மதுப்பழக்கம் உடைய இவர் மதுவில் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதை தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வாத்திக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சேப்பெருமாள். விவசாயி. இவரது மகன்கள் முருகேசன், செல்வராசு. இவர்கள் இருவருக்கும் பாதை பிரச்சினை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசனை செல்வராசு, அவரது மகன் ரஜினி மற்றும் உறவினர் சங்கர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
- பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த செங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது50). கூலி தொழிலாளியான இவர், வயல் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 21 வயது பெண்ணை, தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி இளங்கோவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அபராதத் தொகை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- 300 விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
- பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்
அரியலூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் 300 சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் தனியாரால் வைக்கப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். கடந்தாண்டு போலவே நிகழாண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதியளிக்க வில்லை. இதையடுத்து விசர்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு, கொள்ளிடம் ஆறு மற்றும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அணைக்கரையில் கரைக்கப்பட்டன. திருமானூர், கீழப்பழுவூர், திருமழபாடி,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அரியலூர் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி,குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டது.மீதமுள்ள சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விசர்ஜனம் நிகழ்ச்சியையொட்டி, சிலை ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகள்,பதற்றமான பகுதிகள்,மசூதிகள் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
- சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆய்வு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மாவட்ட முழுவதும் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் உட்கோட்ட போலீஸ் சரகத்தில் திருமானூர், திருமழப்பாடி கொள்ளிடக்கரை பகுதியிலும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் சரகத்தில் வடவார்தலைப்பு, மதனத்தூர் ஆகிய கொள்ளிட ஆற்று நீர்நிலைகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் சரகத்தில் விநாயகர் சிலை கரைக்கும் இடமான மதனத்தூர் மற்றும் வடவார்தலைப்பு ஆகிய கொள்ளிட ஆற்று பாலத்தில் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றில் இறங்கி விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாலத்தில் இருந்து கிரேன் மூலம் ஆற்றில் சிலைகளை கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரமும் கண்காணிப்பில் இருந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாவட்ட உதவி சூப்பிரண்டு ரவிசேகரன், ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்."
- தில்லை காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம் நடைபெற்றது.
- கொடியேற்றத்துடன் தொடங்கியது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருநடன உற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஒரு மண்டலம் விரதம் இருந்தவர் அம்மன் போல் நகைகள், புடவை அணிந்துகொண்டு நடனமாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று அருள்வாக்கு கூறினார். பின்னர் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்."
- விவசாயி கொலை வழக்கில் அவரது இரண்டாவது மனைவி மகன் மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் சாமிநாதன் (வயது 90) இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். முதல் மனைவிக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தை பராமரிக்க முதல் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவி பஞ்சவர்ணத்திற்கு தங்கமணி என்ற மகனும், சாந்தி என்ற மருமகளும் உள்ளனர். சாமிநாதன் தன்னிடம் இருந்த சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு, தனது கடைசி காலத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயரில் வைத்துக் கொண்டு, இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது தனது பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது மனைவி மகன் தங்கமணியின் மகனுக்கு சாந்தியை கார்டியனாக காண்பித்து உயிர் எழுதி வைத்துள்ளார், அதில் முதல் மனைவியின் மகன் தர்மராஜ் அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் பாதியை கேட்டு தகராறு செய்துள்ளார், சாமிநாதன் உயிரோடு இருந்தால் நிலத்தை பாதி எழுதி கொடுத்து விடுவான் என திட்டமிட்டு சொத்து தகராறு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அன்று இரவு இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி மூவரும் சேர்ந்து சாமிநாதனை வெட்டி கொலை செய்து விட்டனர். விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிவில் இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000- அபராதமும் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ரயில் மோதி பெண் பலியானார்
- பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி செல்லம் (வயது 52). இவர், டாஸ்மாக் கடை அருகே கிடக்கும் காலியான மதுபான பாட்டில்களை சேகரித்து, கடையில் விற்று, சம்பாதித்து வந்தார். இந்நிலையில் அதிகாலை அரியலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இவர் மீது, அந்த வழியாகச் சென்ற குட்ஸ் ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து அரியலூர் இரும்புபாதை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஓவியர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
- மாவட்ட தலைவர் தலைமை வகித்தார்
அரியலூர்:
அரியலூரில் தமிழ்நாடு ஓவியர் தொழிலாளர் நல மேம்பாட்டு சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஓவியர்கள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார், கௌரவ ஆலோசகர் கணபதி, அண்ணாமலை, கௌரவத் தலைவர் மணிமாறன், ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட தலைவர் கலையரசன் வரவேற்று பேசினார், மாவட்ட அமைப்புச் செயலாளர் அபூர்வா, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணாரஞ்சித், மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் தேவேந்திரன், மணி, அந்தோணிராஜ், மாவட்ட நல வாரிய பொறுப்பாளர் அசோக்பால்ராஜ், நாகை மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் நாஜிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்பு உரையாற்றினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட பொருளாளர் அருள் செல்வன் நன்றி கூறினார்.
- மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்ேபாது மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி(வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்.
- சொந்த ஊர் நோக்கி இருசக்கரவாகனத்தில் வந்துள்ளார்
அரியலூர்;
திருச்சி மாவட்டம், விரகாலூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆபேல்ராஜ்(வயது 29). இவர் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சிதம்பரம்- திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் துணை மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஆபேல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்னல் தாக்கி 2 பேர் பலியானர்
- ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கீழப்பழுவூர் அருகேயுள்ள வாரணவாசி, மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன்(வயது40). இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், இவர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அன்பரசன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர், உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதே போல், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில் பெய்த மழையில், அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாலைமணி என்பவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈச்சங்காடு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பலத்தகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் பெண்ணடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இருச்சம்பவங்கள் குறித்து தளவாய் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






