என் மலர்

  நீங்கள் தேடியது "dissolution"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 300 விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
  • பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்

  அரியலூர்:

  விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் 300 சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் தனியாரால் வைக்கப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். கடந்தாண்டு போலவே நிகழாண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதியளிக்க வில்லை. இதையடுத்து விசர்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு, கொள்ளிடம் ஆறு மற்றும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

  ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அணைக்கரையில் கரைக்கப்பட்டன. திருமானூர், கீழப்பழுவூர், திருமழபாடி,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அரியலூர் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி,குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டது.மீதமுள்ள சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகிறது.

  விசர்ஜனம் நிகழ்ச்சியையொட்டி, சிலை ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகள்,பதற்றமான பகுதிகள்,மசூதிகள் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
  • அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

  கரூர்:

  விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூர் மாவட்டத்தில் 277 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இவற்றில் முதல் நாளான கடந்த 31ம் தேதி 9, 2வது நாளான நேற்று முன்தினம் கரூரிலிருந்து 38, இதர பகுதிகளிலிருந்து 155 என மொத்தம் 193 என இரு நாட்களில் 202 சிலைகள் காவிரி, அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. 3வது நாளான நேற்று அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரம் பகுதிகளில் தலா 18 என மொத்தம் 36, வேலாயுதம்பாளையம் பகுதியில் 27, குளித்தலையில் 8 என மொத்தம் 35 என ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முறையே முதல் இரு பகுதிகளில் அமராவதி ஆறு, அடுத்த இரு இடங்கள் காவிரி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலத்தை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருதன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்திருப்பது அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
  வாஷிங்டன்:

  இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.  இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

  இலங்கையில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

  அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது. உங்களுடைய (சிறிசேனா) சமீபத்திய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், உங்கள் நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகளை தடம் புரளச்செய்யும் வகையிலும் அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரக் குழு, இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
  ×