என் மலர்
அரியலூர்
- ரூ.5 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
- தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ்(வயது 45) என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திடீரென தீப்பற்றி, கரும் புகையாக புகைந்து, புகைமூட்டம் வந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து கணேசனிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- போதையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் சரவணன்(வயது 32). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ந் தேதி தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற அவர்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சரவணன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கிருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு சரவணனின் தாயார் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். சரவணன் போதையில் நிகழ்ச்சி நடந்த வீட்டிற்கு அருகிலேயே மயங்கி கிடந்துள்ளார். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்த நிலையில் இதுகுறித்து சரவணனின் தந்தை சந்திரகாசனுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சந்திரகாசன் தாதம்பேட்டை வந்து சரவணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணனின் தந்தை சந்திரகாசன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
- முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவரின் மகன் முத்துக்குமார்(வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தார். இந்த நிலையில் இவர் சம்பவதன்று கல்லூரி செல்லாமல் இருந்ததால் அவரது தந்தை முத்துக்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள
அரியலூர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மேலும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மிலாடிநபியை முன்னிட்டு வருகிற 9-ந்தேதியும் ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"
- மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் பிடித்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 41) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சின்னதுரையை கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள பரணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் நேற்று பெரியகருக்கை பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மேலத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் (70) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட மாநாடு நடந்தது
- பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டட தொழிலாளர் சங்க மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார், முன்னால் சிபிஐ ஒன்றியசெயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார். ராதாகிருஷ்ணன், ராஜு, சங்கர், பானு, ஜோதி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் தண்டபாணி சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார், கரும்பாயிரம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், மாநிலதுணை பொதுசெயலாளர் செல்வராஜ் தொடக்க உரையாற்றினார். விவாதபொருப்புரைபுதியநிர்வாகிகள்தேர்வுகோரிக்கை விளக்கவுரை மாவட்ட செயலாளர் ஜீவா வாசித்தார்,
நிகழ்ச்சியில் பெண்கள் கட்டுமான அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர் நந்தினி, ஒன்றிய செயலாளர் கனகராஜ், வாழ்த்துரை நிகழ்த்தினர், மாநாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக அனைத்து தொழில்களும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அரசு துறைகளில் திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் இதர அனைத்து தொழிலாளர்களுக்கும் 90 சதவீதம் வேலைகளை ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
மகப்பேறு கால சட்டப்படி பெண்கள் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆறு மாத சம்பளம் பிரசவகால உதவியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
- கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களின் தற்காலிக பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், பணிவரன் முறை தகுதிகான பருவம் நிறைவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.ராஜா தலைமை வகித்தார். செயலர் பாக்கியராஜ், மாநில பிரச்சார செயலர் அ.பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனற். மாநிலத் தலைவர் இரா.அழகிரிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடியாக திகழ தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- குறைதீர் ஆணைய நீதிபதி தெரிவித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் இயன்ற வரை அனைவருக்கும் நுகர்வோர் சட்டக் கல்வி பயிற்சி நடத்துவது என்ற அடிப்படையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு அரசு அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலகம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள வருவாய்த் துறையினரும், நில அளவைகள் நில அளவை பதிவேடு துறையினரும் பொதுமக்கள் சேவை கட்டணம் செலுத்தி கேட்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பிரச்சனைகள் வழக்குகளாக மாறக்கூடிய நிலை தவிர்க்கப்படும். கடந்த 6 மாதங்களில் அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு சில வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக 15 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் அச்சட்டம் நீக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
புதிய சட்டத்தின்படி நுகர்வோர் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தவறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு மாற்றப்பட்டன.
இவ்வாறு நிலுவையில் இருந்த வழக்குகள் 4 வழக்குகளை தவிர அனைத்தும் கடந்த ஆறு மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் குறைந்தபட்சம் 90 நாட்கள் அல்லது அதிகபட்சம் 150 நாட்களில் தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நுகர்வோரை பாதுகாக்க அரசு ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட கல்வியை மேம்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியார் கணினி மையங்களில், பொது மக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை மையங்களில் வருவாய்த் துறை சான்றிதழ்கள், உதவித் தொகை கோரும் திட்டங்களுக்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது அதிக கட்டணம் பெறுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
வருவாய்த்துறை சான்றுகளின் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.60, ஓய்வூதிய திட்டம் தொடர்பான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.10, சமூகநலத்துறை திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தவற்கு மனு ஒன்றுக்கு ரூ120, இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ60 சேவைகட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவித்து, பொது இ-சேவை மையங்கள் மற்றும் அரசு உரிமம் பெற்ற தனியார் கணினி மையங்களை அணுக வேண்டும்.மேலும் சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
- கோபமடைந்த ஆசிரியை துடப்பதால் மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.
அரியலூர்:
அரியலூர் வாலாஜா நகரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி இவரது மகன் நிவாஸ் (வயது9). இந்த சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
அரியலூர் வாலாஜா நகரம் கல்லாத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசை தம்பி. அவரது மகன் சுசீந்திரன்( 9). இந்த சிறுவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
இதில் கோபமடைந்த அந்த ஆசிரியை துடப்பதால் அந்த மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.
இது பற்றி அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிக்கூடத்தில் நேரடி விசாரணை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியை துடப்பத்தால் அடித்த சம்பவம் அரியலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 4ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை ஆசிரியை துடப்பத்தால் அடித்ததாக புகார் எழுந்துள்ளது
- கல்வி அதிகாரி நேரில் விசாரணை
அரியலூர்:
அரியலூர் வாலஜா நகரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி இவரது மகன் நிவாஸ் (வயது9). இந்த சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
அரியலூர் வாலாஜா நகரம் கல்லாத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசை தம்பி. அவரது மகன் சுசீந்திரன்( 9). இந்த சிறுவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
இதில் கோபமடைந்த அந்த ஆசிரியை துடப்பதால் அந்த மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.
இது பற்றி அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ ர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நேற்றைய தினம் பள்ளிக்கூடத்தில் நேரடி விசாரணை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட மாண வர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை யின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியை துடப்பத்தால் அடித்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.






