என் மலர்tooltip icon

    அரியலூர்

    • உடையார்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலையில் தத்தனூர் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தியது, ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். பின்னர் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்."

    • நர்சிங் மாணவி மாயமானார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரியான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் இளமதி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற பிரியதர்ஷினி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் மாயமான நர்சிங் மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்."

    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்
    • போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

    அரியலூர்

    அரியலூர் தேரடி அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு புதிய அபராதம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடை–பெற்றது.

    நிகழ்ச்சியில் போக்கு–வரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது

    போக்குவரத்து விதி மீறல் புதிய அபராதம் விதிப்பது குறித்து அரசு அறிவித்துள்ளது, அரசின் உத்தரவை அமுல்படுத்துவது காவல்துறையின் கடமை–யாகும், போலீசார் வாகன தணிக்கையின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், முதல் முறை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மறுமுறை மீறினால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடம் இருக்கி–ன்றது.

    ஆவணம் இன்றி சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதமும், வாகனம் வேகமாக ஓட்டி–னால் ஐந்தாயிரமும், மறுமுறை ஓட்டினால் பத்தாயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தி–னால் ஆயிரமும்மறுமுறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் அபராதம் விதிக்க–ப்படும் காவல்துறை–யின் மூலம் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

    அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென போக்கு–வரத்துதுறை போலீசார் எச்சரித்து–ள்ளனர்.

    • ஏர் உழவர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது
    • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் ஏர் உழவர் சங்க தலைவர் தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் பாக்யராஜ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன், மாநில துணைத்தலைவர் தங்கத்தமிழன், ஆசைத்தம்பி மாநில ஏர் உழவர் சங்க துணை தலைவர், தலைமை நிலைய செயலாளர் மதியழகன் கவிஞர். அறிவு மழை, புலவர் அரங்கநாடன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவ கல்வியை தமிழில் பயில திட்டமிட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக கல்வி முறையாக தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை கற்பதை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் கல்வியை கட்டாயமாகவும் அரசு செயல்பாட்டின் மொழியாக இரு மொழி தவிர்த்து தமிழ் தாய் மொழியை அரசு முறையாக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மன வருத்தத்தில் இருந்த அபிராமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைத்து, 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைமனையில் சேர்த்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். கூலி தொழிலாளியான இவருக்கு அபிராமி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் அகிலேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். மேலும் மனைவி அபிராமி 5 மாத கர்ப்பிணையாக உள்ளார்.

    இந்நிலையில் விஜய் பிரகாஷ் கறி எடுத்து வந்து கொடுத்ததாகவும், கறியை சமைப்பதற்காக அபிராமி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அவரது மகன் அகிலேஷ் தண்ணீரில் விளையாடியதால் அபிராமி சிறுவனை அடித்துள்ளார்.

    இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியை தகாத வார்த்தைகளால் திட்டி குழந்தையை ஏன் அடிக்கிறாய் என கேட்டுள்ளனர். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷிடம் கூறிய போது, அவரும் அவரது தாய், தந்தைக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த அபிராமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைத்து, 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை முடிந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் நாகமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர் அதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (19) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்."

    • கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
    • அரியலூர் மாவட்டத்தில் விரா சாட் திட்டத்தில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "விராசாட்" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையினராக (இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இருத்தல் வேண்டும். 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விராசட் 1ல் பயன்பெறாத நபராகவும், ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமலும் இருகக வேண்டும். கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டி வீதத்திலும், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரார் கோரும் கடன் தொகையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் மூலம் 90 சதவீதம் கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத் தொகை 5 சதவீதம் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    • அரியலூரில் வருகிற 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 12-ம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது,

    நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும், அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம் எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளுக்கு ரூ.7.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது
    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு அதிரடி

    அரியலூர்:

    மத்திய அரசின் வேளாண்மை காப்பீடு நிறுவனமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுத்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குழுமூரைச் சேர்ந்த 60 விவசாயிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு காப்பீடு செய்திருந்தனர். ஆனால் இயற்கை சூழ்நிலையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், அதற்கான இழப்பீடு தொகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

    இந்த தீர்ப்பையடுத்து விவசாயிகளுக்கு ரூ 7.2 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

    இந்த ஒப்பந்த நகலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜிடம் விவசாயிகள் வழங்கினர். இதன் பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.2 லட்சத்தை இணைய வழியில் வழங்கினார். இந்த வழக்கை விசாரிக்க தமிழகத்திலே முதல் முறையாக 5 மத்தியஸ்தர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றறது. ஆண்டிமடம் அருகேயுள்ள தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் மற்றும்வரத–ராசன் பேட்டைஅலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர்.

    அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகள் படையலிட்டு, பின்னர் அதில் மெழுகு–வர்த்திகள், ஊதுவர்த்திகள் கொண்டு அவர்கள் நினை–வாக பிரார்த்தனை செய்து சிலுவையை நட்டும் அஞ்சலி செலுத்தினர்.

    பங்குதந்தை வின்செ–ன்ட்ரோச்மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போல் தென்னூர் லூர்து ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை பிலிப்சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நெட்டலகுறிச்சி புனித சவேரியார் ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குலமாணிக்கம் இஞ்ஞாசியர், புதுக்கோட்டை தூய மங்கள அன்னை, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் ஜயங்கொ–ண்டம், கூவத்தூர்,அரிய–லூர், உடையா–ர்பாளையம், செந்துறை, கல்லக்குடி கிராமம் உள்ளிட்ட பகுதி–களிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, திருவள்ளுவர் ஞான மன்றம் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி காலனி தெருவை சேர்ந்தவர் சஞ்சாய்காந்தி மகன் பிரவின்குமார்(வயது 23), இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன் மகன் பிரதீப்க்கும்(வயது 27) முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரதீப் மற்றும் இவரது தாய் செந்தாமரை ஆகிய இருவரும் சேர்ந்து பிரவின்குமார் வீட்டிற்கு சென்று அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரவின்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரவின்குமாரின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×