என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.7.2 லட்சம்"

    • விவசாயிகளுக்கு ரூ.7.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது
    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு அதிரடி

    அரியலூர்:

    மத்திய அரசின் வேளாண்மை காப்பீடு நிறுவனமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுத்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குழுமூரைச் சேர்ந்த 60 விவசாயிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு காப்பீடு செய்திருந்தனர். ஆனால் இயற்கை சூழ்நிலையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், அதற்கான இழப்பீடு தொகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

    இந்த தீர்ப்பையடுத்து விவசாயிகளுக்கு ரூ 7.2 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

    இந்த ஒப்பந்த நகலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜிடம் விவசாயிகள் வழங்கினர். இதன் பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.2 லட்சத்தை இணைய வழியில் வழங்கினார். இந்த வழக்கை விசாரிக்க தமிழகத்திலே முதல் முறையாக 5 மத்தியஸ்தர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×