என் மலர்
மேற்கு வங்காளம்
- எதிர்க்கட்சிகளை பா.ஜனதா துன்புறுத்தி வருகிறது.
- அனைத்து மதங்களையும் நேசிக்க வேண்டும்
கொல்கத்தா :
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இனிவரும் மாதங்களில் இப்பணி வேகமெடுக்கும் என்று தெரிகிறது.
அதே சமயத்தில், தங்களை ஒடுக்க விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சம்ஷெர்கஞ்ச் பகுதியில், கங்கை நீர் அரிப்பால் வீடுகளை இழந்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி நடந்தது. அதில், அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது:-
அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும். பா.ஜனதாவை தோற்கடிக்க ஒரே ஒரு எதிர்க்கட்சி மட்டும் மோத வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு வலுவாக உள்ள எதிர்க்கட்சி மட்டும் பா.ஜனதாவுடன் மோத வேண்டும். மற்ற எதிர்க்கட்சிகள், அந்த எதிர்க்கட்சியை ஆதரிக்க வேண்டும். ஓரணியாக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை பா.ஜனதா துன்புறுத்தி வருகிறது. யார் மீதாவது அந்த அமைப்புகளை ஏவி விடுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நபர் மீது தவறு இல்லை, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று விசாரணை அதிகாரிகள் சொன்னாலும், வேறு ஏதாவது பொய் வழக்கு போட்டு அசிங்கப்படுத்துமாறு பா.ஜனதா சொல்கிறது.
நாட்டை இதுபோன்று இழிவுபடுத்தக்கூடாது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையால் ஓட்டு கிடைக்காது என்பதை பா.ஜனதா புரிந்து கொள்ள வேண்டும்.
தேசபக்தி கொண்டவரும், ஒவ்வொருவரையும் நேசிப்பவரும்தான் உண்மையான தலைவர். அனைத்து மதங்களையும் நேசிக்க வேண்டும்
முர்ஷிதாபாத், மால்டா மாவட்டங்களில் கங்கை அரிப்பு காரணமாக ஏராளமானோர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.
அப்பிரச்சினையை தடுக்க மத்திய அரசிடம் உதவி கேட்டோம். ஆனால் மத்திய அரசு உதவவில்லை. வங்காளதேசத்துடனான இருதரப்பு நதிநீர் ஒப்பந்தம் மூலம் கிடைத்த பணத்தில் மேற்கு வங்காள அரசின் பங்கான ரூ.700 கோடியையும் தரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போராட்டம் நடத்தினார்.
- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு அளிப்பதில்லை.
கொல்கத்தா :
100 நாள் வேலைத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கத்தவறினால், டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்குகிற வகையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தை கொண்டு வந்தது.
இந்தத் திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்துக்கு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என தெரிகிறது.
இதற்காக மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லியிலும் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை மெயினாகுரி என்ற இடத்தில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி., பேசும்போது வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு அளிப்பதில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போய் இருப்பதால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை மந்திரியை சந்திப்பதற்காக கட்சியின் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு சென்றேன். ஆனால் எங்களை மந்திரி சந்திக்கவில்லை. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கூடிய விரைவில் வழங்க வேண்டும். வழங்கா விட்டால் டெல்லியில் நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என தெரிய வந்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மேலும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்றார்.
- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
- வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர் காலியாகஞ்ச் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.
வெளிநபர்களை கொண்டு வந்து காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பழங்குடியினர் சமூகத்தின் மீது அராஜகம் நடப்பதாக கூறி, மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை 12 மணி நேர பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், 'மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு வங்காள மாவட்டங்களில் பழங்குடியினர் சமூகத்தின் மீது மாநில நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இது போன்ற அட்டூழியங்கள், முன்னெப்போதும் இருந்ததில்லை. வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அவசரகால சேவைகள் வழக்கம்போல் இயங்கும்' என்றார்.
இந்த போராட்ட அழைப்பு தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.
- கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
- தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கே தெரியாது என்றும் பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா, கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 22ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெண் ரத்த வெள்ளத்தில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், பச்சிளங்குழந்தை மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி வியூகம் வகுக்க வேண்டும் என மம்தா வலியுறுத்தினார்.
- கடந்த மாதம் அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக்குடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், முதல்வர் மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வியூகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே பேசியதாவது:-
இன்றைய விவாதம் மிகவும் சாதகமாக அமைந்தது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி வியூகம் வகுக்க வேண்டும். முதலில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பாஜக ஜீரோ ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் அவர்கள் ஒரு பெரிய ஹீரோவாக உருவாகி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் காங்கிரசின் ஈடுபாடு குறித்து கேட்டபோது, 'அனைத்து கட்சிகளும் இதில் ஈடுபட்டுள்ளன' என்று மம்தா பானர்ஜி பதிலளித்தார்.
இதேபோல் கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- மேற்குவங்க மாநிலத்தில் கொளுத்தும் வெயிலால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- கொளுத்திய வெயிலில், அடுப்பு இல்லாமலேயே முட்டை ஆம்லெட்டாக மாறுவதை வீடியோவில் காண முடிகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கொளுத்தும் வெயிலால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அங்கு வாட்டி வதைக்கும் வெயிலின் வெப்பத்தால், அடுப்பில்லாமலேயே ஆம்லெட் போட்டு காட்டும் ஒரு இளைஞரின் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ வீட்டு மொட்டை மாடியில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வெயில் எவ்வளவு உக்கிரமாக இருந்தது என்பதை காட்ட ஒரு பரிசோதனையை வாலிபர் மேற்கொள்ளும் காட்சிகள் அதில் இருந்தது.
மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ஒரு கடாயை வெயில் நன்கு முழுவதும் படும் வகையில் வைக்கிறார். பின்னர் கரண்டியால் முட்டையை உடைத்து கடாயில் ஊற்றுகிறார். அதை ஆம்லெட் வடிவத்தில் கொண்டு வருவதற்காக கடாய் முழுவதும், உடைத்த முட்டையை கைகளால் பரவ செய்கிறார். பின்னர் சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுகிறார். கொளுத்திய வெயிலில், அடுப்பு இல்லாமலேயே முட்டை ஆம்லெட்டாக மாறுவதை வீடியோவில் காண முடிகிறது. வடமாநிலங்களில் கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரத்தை காட்டும் வகையிலான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 3 சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கான்வே மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 56 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய ரகானே, ஷிவம் டூபே ஜோடியும் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது.
ஷிவம் டூபே 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
ரகானே 71 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக ஜாசன் ராய் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரங்கு சிங் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். நிதிஷ் ராணா 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும், ஆண்டிரே ரசல் 9 ரன்கள் எடுத்தனர். உமேஷ் யாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.
- டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா:
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 3 சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கான்வே மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 56 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய ரகானே, ஷிவம் டூபே ஜோடியும் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது. ஷிவம் டூபே 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. ரகானே 71 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும்.
- பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியளிப்போம்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ரம்ஜான் பண்டிகையையொட்டி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும். சிலர் (பா.ஜனதா) வெறுப்பு அரசியலை புகுத்தி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டுக்காக உயிரை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால் நாட்டை பிளவுப்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம்.
எனது அரசியல் எரிதிகளின் பணபலம் மற்றும் மத்திய ஏஜென்சிகளுக்கு எதிராக நான் போராட தயாராக இருக்கிறேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அரசியல் உள் நோக்கத்துடன் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் நான் தலைகுனிய மாட்டேன்.
பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியளிப்போம். ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால் அனைத்தும் முடிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
- கட்சி அந்தஸ்து குறித்து உள்துறை மந்திரியிடம் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது.
இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மேற்கு வங்காள மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரியில் பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், நாட்டில் மீண்டும் மோடி பிரதமர் ஆவதை உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களைத் தரவேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களது கட்சி தொடர்ந்து, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றே அழைக்கப்படும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அந்தஸ்து தொடர்பாக அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் நான் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது என தெரிவித்தார்.
- சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார்.
- சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக தகவல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் பாஜகவில் இணைய விரும்புவதாக கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்த முகுல் ராய், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் பாஜகவுக்கு தாவினார். 2020ல் பாஜக தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திடீரென மமதா பானர்ஜியின் தலைமையை ஏற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கட்சியினரும் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
அதன்பின்னர் நேற்று மாலை செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முகுல் ராய் கூறியதாவது:-
நான் பாஜக சட்டமன்ற உறுப்பினர். நான் பாஜகவுடன் இருக்க விரும்புகிறேன். உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் கட்சி தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த பேச விரும்புகிறேன்.
சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன். தற்போது நான் நலமாக உள்ளேன், மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளேன். அதேசமயம் திரிணாமுல் காங்கிரசுடன் ஒருபோதும் இணைந்து செயல்படமாட்டேன் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. இதேபோல் என் மகன் சுபரங்ஷுவும் பா.ஜ.க.வில் சேர வேண்டும், அது அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






