என் மலர்
மேற்கு வங்காளம்
- மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அபிஷேக் பானர்ஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் முக்கிய தலைவருமான அபிஷேக் பானர்ஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில், நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதற்கு முன்பும், மத்திய அமைப்புகள் என்னை அழைத்த போதெல்லாம், நான் ஆஜராகி முழு ஒத்துழைப்பையும் அளித்தேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது கட்சி மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பா.ஜ.க. குறிவைக்கிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு பயப்படவில்லை. அபிஷேக்கிற்கு மத்திய புலனாய்வு அமைப்பு அனுப்பிய சம்மன்களின் பின்னணியில் காவி கட்சி இருக்கிறது. எங்களின் பிரச்சாரத்தின் வெற்றியை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது. மத்தியில் இருந்து பா.ஜ.க. அகற்றப்படும் வரை, அதன் கொடுங்கோன்மைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.
- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிட மாநில அரசு தடை விதித்தது.
கொல்கத்தா:
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்துவந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர்.
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இது மாநில அரசின் தோல்வி அல்லது வெற்றி என்ற கோணத்தில் எதிர்க்கட்சியினர் சித்தரிக்க முயலவேண்டாம். தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதன் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் என தெரிவித்துள்ளது.
- மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.
- இந்தப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை நேற்று வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
- திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது.
- எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா:
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 36 ஆண்டுக்கு பின் அங்கு 137 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை. அதேபோல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.
கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், வங்காளத்தில் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும்.
திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்காளத்தில் டிஎம்சி, பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி மற்றும் பிறராலும் ஆதரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை மரணம்.
- மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து கேள்வி.
மேற்கு வங்காளத்தில், ஆஷிம் தேப் சர்மா என்பவர் தனது மகனின் சடலத்தை ஆன்புலன்சில் எடுத்து செல்ல பணம் இல்லாததால் பையில் வைத்து 200 கி.மீ., தூரம் பேருந்தில் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், டார்ஜிலிங் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஷிம் தேப் சர்மாவின் 5 மாத ஆண் குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தை கலியகஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல பணம் இல்லாததால், ஆஷிம் தனது குழந்தையின் சடலத்தை பையில் வைத்து பேருந்தில் 200 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளார்.
இதுகுறித்து தந்தை ஆஷிம் கூறுகையில், " சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு எனது ஐந்து மாத மகன் நேற்றிரவு இறந்தார். சிகிச்சையின்போது ரூ. 16,000 செலவழித்தேன். எனது குழந்தையை கலியாகஞ்சிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு ரூ.8000 கேட்டார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை.
அதனால், பையில் வைத்து பேருந்தில் எடுத்து சென்றேன். சக பயணிகளுக்குத் தெரிந்தால் இறக்கிவிடப்படுவோம் என்று பயந்து, யாருக்கும் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்திற்கு பயணித்தேன்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், 102 திட்டத்தின் கீழ் உள்ள வசதி நோயாளிகளுக்கு மட்டுமே இலவசம் என்றும் சடலங்களைக் கொண்டு செல்வதற்கு அல்ல என்றும் கூறிவிட்டனர்" என்று உருக்கமாக கூறினார்.
இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி," திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், ஒரு குழந்தையின் துரதிர்ஷ்டவசமான மரணத்தை வைத்து இழிந்த அரசியலில் விளையாட பாஜக முயற்சிப்பதாக டிஎம்சி மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டினார்.
- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
- அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா:
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
- அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
- கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.
வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து வருகிற 14ம் தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.
இதன் எதிரொலியால், மேற்கு வங்க மாநிலம் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்களையும், 200 மீட்புப் பணியாளர்களையும் தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2வது பட்டாலியின் குர்மிந்தர் சிங் கூறியுள்ளார்.
- ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
- இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கொல்கத்தா:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், கே.எல்.ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
- உடற்பயிற்சி செய்யும்போது நம்மை உற்சாகப்படுத்த ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என சிலர் நினைப்பார்கள்.
- இன்னும் சிலரோ சுறுசுறுப்பாக இருப்பதற்காக பாடல்களை கேட்டபடி உடற்பயிற்சி செய்வார்கள்.
உடற்பயிற்சி செய்யும்போது நம்மை உற்சாகப்படுத்த ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என சிலர் நினைப்பார்கள். இன்னும் சிலரோ சுறுசுறுப்பாக இருப்பதற்காக பாடல்களை கேட்டபடி உடற்பயிற்சி செய்வார்கள். அந்த வகையில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சிறிய நாய்க்குட்டி ஒன்றை கையில் பிடித்துகொண்டு டிரெட்மில்லில் நடப்பதுபோன்ற ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
அதில் பிசியான கால அட்டவணையில் இருந்தாலும் டிரெட்மில்லில் வேலை செய்வதற்கு கணிசமான நேரம் கொடுப்பதாக மம்தாபானர்ஜி குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மம்தா பானர்ஜி நீலநிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை அணிந்து, சிறிய பஞ்சு போன்ற நாய்க்குட்டியை பிடித்து கொண்டு டிரெட்மில்லில் நடக்கிறார். சில நாட்களில் உங்களுக்கு சில கூடுதல் உந்துதல் தேவை என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டது. வீடியோவை 3.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
- கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன்.
- ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று நினைக்கிறேன். தற்போதுள்ள தலைவர்கள் பலரை நான் அறிவேன். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் செல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பும் அல்லது வேறு ஏதாவது அமைப்பு விசாரணை நடத்தும் என அவர்கள் பயப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே, இந்தியாவிற்கு ஆளும் கட்சியுடன் நட்பு பாராட்டாத ஒரு எதிர்க்கட்சி தேவை.

மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் தைரியமான பெண்மணி. அவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்து போராடினார் என்பதை பார்க்க வேண்டும். நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் யாருக்கும் தெரியாது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன். அவரை பிளாக்மெயில் செய்வது என்பது சாத்தியமற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்றைய சூழ்நிலையில் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார். அப்படி மாயாவதியையும் நினைத்து பார்த்தேன். தற்போதைய சூழ்நிலையில், மம்தா பானர்ஜி அப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார். தலைநிமிர்ந்து நிற்கும் துணிவு கொண்ட ஒரே பெண் தலைவர் அவர்தான்' என்றார்.
- பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
- 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன், லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன், ஜிதேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நெருக்கடிக்கு மத்தியிலும், சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்த ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷி தவான் 19 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும் அவுட் ஆகினர்.
கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஷாருக்கான் 21 ரன்களும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்களும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹரிஷ் ராணா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஆந்திரே ருசல் 42 ரன்களும், ராசன் ராய் 38 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியாக விளையாட வந்த ஷர்துல் தகூர் பூஜ்ஜியம் ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.
- துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன், லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன், ஜிதேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். நெருக்கடிக்கு மத்தியிலும், சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்த ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ரிஷி தவான் 19 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும் அவுட் ஆகினர். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஷாருக் கான் 21 ரன்களும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்களும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹரிஷ் ராணா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.






