மேற்கு வங்காளத்தில் சோகம் - பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.இந்தப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
மேற்கு வங்காளத்தில் சோகம் - பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலை நேற்று வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com