search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed in lightning strikes"

    • மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என தெரிய வந்துள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

    மேலும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்றார்.

    மேற்கு வாங்காளம் மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    கொல்கத்தா :

    மேற்கு வாங்காளம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் 4 பேரும், ஹூக்லி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 

    மேற்கு மித்னாபூர், பிர்பூம் மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் மின்னலுக்கு` பலியாகியுள்ளனர். மேலும், பலர் மின்னல் தக்கியதில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ×