என் மலர்
இந்தியா

சுட்டெரித்த வெயிலால், அடுப்பு இல்லாமலேயே ஆம்லெட் போட்ட வாலிபர்
- மேற்குவங்க மாநிலத்தில் கொளுத்தும் வெயிலால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- கொளுத்திய வெயிலில், அடுப்பு இல்லாமலேயே முட்டை ஆம்லெட்டாக மாறுவதை வீடியோவில் காண முடிகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கொளுத்தும் வெயிலால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அங்கு வாட்டி வதைக்கும் வெயிலின் வெப்பத்தால், அடுப்பில்லாமலேயே ஆம்லெட் போட்டு காட்டும் ஒரு இளைஞரின் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ வீட்டு மொட்டை மாடியில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வெயில் எவ்வளவு உக்கிரமாக இருந்தது என்பதை காட்ட ஒரு பரிசோதனையை வாலிபர் மேற்கொள்ளும் காட்சிகள் அதில் இருந்தது.
மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ஒரு கடாயை வெயில் நன்கு முழுவதும் படும் வகையில் வைக்கிறார். பின்னர் கரண்டியால் முட்டையை உடைத்து கடாயில் ஊற்றுகிறார். அதை ஆம்லெட் வடிவத்தில் கொண்டு வருவதற்காக கடாய் முழுவதும், உடைத்த முட்டையை கைகளால் பரவ செய்கிறார். பின்னர் சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுகிறார். கொளுத்திய வெயிலில், அடுப்பு இல்லாமலேயே முட்டை ஆம்லெட்டாக மாறுவதை வீடியோவில் காண முடிகிறது. வடமாநிலங்களில் கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரத்தை காட்டும் வகையிலான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






