என் மலர்
உத்தரப் பிரதேசம்
- 3 பேர் கள்ளநோட்டுகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர்.
- உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா பகுதியில் ஒரு கும்பல் ரூபாய் நோட்டுகளுக்கு 3 மடங்கு கள்ள நோட்டுகளை கொடுத்து பரிமாற்றம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது 3 பேர் கள்ளநோட்டுகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ஹர்வன்சிங் என்கிற சோனு, குர்னாம், சதாம் உசேன் என்று தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது ரூ.1 லட்சம் கொடுத்தால் பதிலுக்கு ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்தது தெரிய வந்தது.மேலும் இவர்களுக்கு நேபாளம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- பிற மாநிலங்களில் இருந்து சுமார் 300 கைவினைஞர்கள் இந்த ஆண்டு 'விஷ்வ பந்துத்வா' என்ற கருப்பொருளில் பங்கேற்கின்றனர்.
- நிகழ்சியை ஏற்பாடு செய்ததற்காக ஆக்ரா நிர்வாகம், உ.பி. சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கு வாழ்த்துகள் என்றார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் அம்மாநில உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் நேற்று தாஜ் மஹோத்சவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மஹோத்சவை தொடங்கி வைத்த உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் பின்னர் பேசியதாவது:-
ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 300 கைவினைஞர்கள் இந்த ஆண்டு 'விஷ்வ பந்துத்வா' என்ற கருப்பொருளில் பங்கேற்கின்றனர்.
இந்த மஹோத்சவ் கலை, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளின் கலவையாகும். இது உள்ளூரில் வசிப்பவர்களை மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
இதுபோன்ற நிகழ்சியை ஏற்பாடு செய்ததற்காக ஆக்ரா நிர்வாகம், உ.பி. சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு, அனைவருக்கும் சம உரிமை தொடர்பான பதாகைகளை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஏந்தியிருந்தனர்.
- சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுநரே திரும்பி போ என கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
இந்த அமளிக்கு மத்தியிலும் உரையாற்றிய ஆளுநர், நல்லாட்சி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையில் மாநில அரசு சென்று கொண்டிருப்பதாகவும், குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையுடன் அமைதி மற்றும் நல்லிணக்க சூழல் உறுதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், மாநில அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டதுடன், சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு குறித்தும் பேசினார். அவரது உரையை ஆளும் பாஜக உறுப்பினர்கள் வரவேற்றனர்.
ஆர்எல்டி, காங்கிரஸ், பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு, அனைவருக்கும் சம உரிமை தொடர்பான பதாகைகளை எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏந்தியிருந்தனர்.
முன்னதாக விவசாயிகள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது காவலர்களுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாஜ்வாடி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
- தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
லக்னோ:
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது 10 முதல் 15 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் கூறினர்.
தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமி அதிதியை தாக்கியது.
- கிராம மக்கள், சிறுத்தையை விரட்டியடித்தனர். படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் சோட்டா கிரத்பூர் கிராமத்தை சேர்ந்த அதிதி என்ற 14 வயது சிறுமி தனது தாயுடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமி அதிதியை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சிறுத்தையை விரட்டியடித்தனர். படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பயப்படாமல் சாந்தரேஷ்தேவி அரிவாளால் தாக்கியதால் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது.
- இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் திகேந்திரசைனிக்கு தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
பிஜ்னூர்:
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஜீத்பூர் கிராமத்தை சேர்ந்த சாந்தரேஷ்தேவி (வயது 34). இவரது மகன் திகேந்திரசைனி (10).
நேற்று முன்தினம் காலை சாந்தரேஷ்தேவி அப்பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். தோட்டத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவரது மகன் திகேந்திரசைனி விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுவன் திகேந்திரசைனியை தாக்கியது. இதனால் சிறுவன் கதறி அழுதான். மகனின் கதறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிச்சென்றார் சாந்தரேஷ்தேவி. அப்போது சிறுத்தை திகேந்திரசைனியை தாக்கிய வண்ணம் இருந்தது. உடனே சாந்தரேஷ்தேவி கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையின் தாடையில் தாக்கினார்.
தொடர்ந்து பயப்படாமல் சாந்தரேஷ்தேவி அரிவாளால் தாக்கியதால் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது. இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் திகேந்திரசைனிக்கு தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
இதில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே அவனை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிஜ்னூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தையிடம் சண்டை போட்டதில் சாந்தரேஷ்தேவிக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விமானம் தரையிறங்குவதை ஏ.ஆர். ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது.
- இந்த விவகாரம் உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாரணாசி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எம்.பி. தொகுதியான கேரளாவின் வயநாட்டில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள கமலா நேரு நினைவு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக வயநாட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி சென்றார். ஆனால் வாரணாசி பாபத் விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் டெல்லி திரும்பினார். இது விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது.
ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் மாநில அரசு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த அஜய் ராய் இது குறித்து கூறுகையில், ராகுல் காந்தியின் விமானத்துக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டை வாரணாசி விமான நிலைய இயக்குனர் அர்யமா சன்யால் மறுத்து உள்ளார். விமான நிறுவனமே விமானம் தரையிறங்குவதை ரத்து செய்து விட்டதாக அர்யமா சன்யால் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து வாரணாசி விமான நிலையம் தனது டுவிட்டர் தளத்தில், 'ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்குவதை ஏ.ஆர். ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது. இதை விமான நிலையத்துக்கு 13-ந்தேதி இரவு 9.16 மணிக்கு இ-மெயில் மூலம் தெரிவித்து இருந்தது. சம்பந்தப்பட்ட விமான நிறுவனமே விமான தரையிறக்கத்தை ரத்து செய்துள்ளதால் உங்கள் (காங்கிரசார்) அறிக்கையை சரி செய்து கொள்ளுங்கள்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனினும் இந்த விவகாரம் உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது.
- இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
லக்னோ :
உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்களின் அதிபர்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர்.
இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் இந்த மாநாட்டில் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.33.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டு உள்ளன. இது மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும்.
இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் முதலீட்டுக்கு பாதுகாப்பான இடமாக மாநிலம் உருவாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்பெல்லாம் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் மட்டுமே முதலீடுகள் குவிந்தன. ஆனால் இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு திட்டங்கள் கிடைத்து உள்ளன.
இந்த முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில மந்திரிகளும், அதிகாரிகளும் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவார்கள். 'சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்' என்ற பிரதமர் மோடியின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது.
தொழில்முனைவோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை முதல் களத்தில் தங்கள் முதலீட்டை வழங்குவது வரை அவர்களுக்கு உதவுவதற்காக 'ஊக்குவிப்பு கண்காணிப்பு அமைப்பு' போன்ற வெளிப்படையான ஒற்றைச் சாளர அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இத்தகைய சிறந்த சட்டம்-ஒழுங்கு நிலவரம், முதலீட்டாளர்களை இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கிறது. புதிய இந்தியாவின் ஒரு வளர்ந்த மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது
இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
- திருமண நிகழ்ச்சியில் கமல் குமாருக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான்.
உத்தரபிரதேச மாநிலம் பெரலி அருகே உள்ள ரத்னா நந்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரி சங்கர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கமல் குமார் (வயது 11) 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று இவன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான். பின்னர் சிறுவர்களுடன் சேர்ந்து நடனமாடினான். அப்போது அவனுக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அவனை கமல் குமார் கீழே தள்ளினான். ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான். இதில் அவனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே கமல் குமார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே அவன் இறந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
- உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது.
- 'மோட்டா ஆனாஜ்' என்றும் அழைக்கப்படும் தினையின் நன்மைகள் நிறைந்த உணவு சூப்பர் ஃபுட்டாக உருவெடுத்துள்ளது.
உத்தரப் பிரதசேம் மாநிலத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 இன்று நடைபெற்றது. 12ம் தேதி ரை நடைபெறும் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது என்று பேசினார்.
இது உத்தரப் பிரதேச அரசின் முதன்மை முதலீட்டு மாநாடு. உச்சி மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களை வணிக வாய்ப்புகளை ஆராயவும் கூட்டாண்மைகளை உருவாக்கவும் ஒன்றிணைக்கும்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது. மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது. 'மோட்டா ஆனாஜ்' என்றும் அழைக்கப்படும் தினையின் நன்மைகள் நிறைந்த உணவு சூப்பர் ஃபுட்டாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- முதல்கட்ட மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் 4 பெண்கள் கணவர்களை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
- 4 பெண்களுக்கும் அனுப்பிய பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.
லக்னோ:
நாட்டில் உள்ள வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மொத்தம் ரூ.2.50 லட்சம் தரப்படும். முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
அதை சரிபார்த்து அடுத்தடுத்த தவணைகளில் மீதித் தொகையை தருவார்கள். இந்த திட்டத்தில் குடும்பத்தலைவி வீட்டின் உரிமையாளாராக அல்லது இணை உரிமையாளாராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த திட்டத்தில் முதல்கட்ட மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் 4 பெண்கள் கணவர்களை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
அம்மாநிலத்தில் பாரா பங்கி மாவட்டத்தில் உள்ள பெல்காரா நகர பஞ்சாயத்து, பாங்கி, ஜைத்பூர் மற்றும் சித்தார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண் பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் இத்திட்டத்தின்கீழ் முதல் கட்ட மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை. இதையறிந்த திட்டத்தின் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். அந்த நோட்டீசுக்கு 4 பெண்களின் கணவன்மார்களும் அதிகாரிகளிடம் நேரில் சென்று பதில் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முதல் தவணை பணம் ரூ.50 ஆயிரம் எங்கள் மனைவிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. பணம் கிடைத்ததும் அந்த 4 பேரும் அவர்களின் கள்ளக்காதலர்களுடன் வீட்டைவிட்டு ஓடி விட்டதாகவும், இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தவிர்ப்பதாவும் கூறியுள்ளனர்.
மேலும் 2-வது தவணை பணத்தை தப்பிதவறி கூட அதே வங்கி கணக்கிற்கு அனுப்பி விட வேண்டாம் எனவும் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே திட்டத்தின் கீழ் 4 பெண்களுக்கும் அனுப்பிய பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.
- ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினர் திருமண விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு உள்ளூர் போலீசில் புகார் மனு அளித்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது.
பரேலி:
உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினரின் மகள் கவிதாவுக்கு நேற்று திருமணம் நடந்தது.
தலித் சமூகத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் திருமண விழாவின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல விலை உயர்ந்த மேலும் சில பரிசுகளையும் குடும்பத்தினர், உறவினர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த அப்பகுதியில் உள்ள மேல் ஜாதியினர் மணப்பெண்ணின் பெற்றோர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினர் திருமண விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு உள்ளூர் போலீசில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், உள்ளூர் கிராமத்தலைவர் தங்களை உயர்ஜாதி குடும்பங்கள் செய்வது போல் நீங்களும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கக்கூடாது என்று மிரட்டினார். மீறினால் திருமண ஊர்வலத்தின் போது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்றும் எச்சரித்தார். எனவே திருமண விழாவிற்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது.






