என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார்.
    • மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ராஜூபால். இவர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப்பின் அண்ணனும், பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான அதிக்அகமது கைது செய்யப்பட்டார். அவர் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் ஒரு நாய் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வாடியுள்ளது. இந்நிலையில் பசி மற்றும் தாகத்தால் அந்த நாய் இறந்தது. இதே போல மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    • சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
    • கோமதி நதியில் மூழ்கி 4 பேர் பலியானார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.

    அப்போது 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலை தேடி வருகிறார்கள்.

    • மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
    • பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து சுல்தான்பூர் மாவட்டட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் கூறியதாவது:-

    கோமதி ஆற்றின் சீதாகுந்த் காட் பகுதியில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கினர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. நான்காவது உடல் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது.

    நீரில் மூழ்கிய நான்கு இளைஞர்களின் வயது 18-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகம் அவர்களின் தகனத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
    • ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால்.

    பதவியேற்ற ஒரு மாதத்தில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இதில் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்தது.

    அஸ்ரப்பின் அண்ணன் அதிக் அகமது பிரபல தாதா ஆவார். ரவுடியான இவர், சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையிலான ரவுடிகள்தான் ராஜ்பால் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அதிக் அகமதும், அவரது சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அஸ்ரப் உள்பட 40 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.

    கடந்த வாரம் உமேஷ்பால் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிக் அகமதின் கும்பல்தான் அவரை கொன்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து, பிரயாக் ராஜ் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், முக்கிய சாட்சி உமேஷ்பாலை மிக அருகில் நின்று சுட்டுக்கொன்ற குற்றவாளியான விஜயக்குமார் என்ற உஸ்மான் சவுத்ரி பிரயாக் ராஜ் நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று இரவு அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உஸ்மான் பற்றி தகவல் தெரிவித்தால், ரூ.2.5 லட்சம் பரிசு தருவதாக உத்தரபிரதேசம் போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்த 85 வயது முதியவர், தனது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
    • மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று முதியவர் கூறியுள்ளார்.

    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் நாத் சிங் (85). இவருக்கு மனைவி, ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். நாத் சிங் மனைவி இறந்ததை அடுத்து தனியாக வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நாத் சிங் முதியோர் இல்லத்திற்கு சென்றார்.

    நாத் சிங்குக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு மற்றும் நிலம் உள்ளது. நாத் சிங்கின் மகன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்நிலையில், தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தன்னைச் சந்திக்க வராததால் மனம் உடைந்த நாத் சிங், தனது நிலத்தை மாநில அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அவர் இறந்த பிறகு அங்கு ஒரு மருத்துவமனை அல்லது பள்ளியைக் கட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார். நாத் சிங் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். மேலும் மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

    • பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் உள்ள பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக வந்த நாய்கள், அந்த சிறுமியை கடித்தன. இதில் படுகாயம் அடைந்த சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுமியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியின் உடலில் 200-க்கும் மேற்பட்ட நாய் கடி இருந்ததாக தெரிவித்தனர்.

    நாய் கடித்து 3 வயது சிறுமி கொடூரமாக இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபருடன் ஒரு நாரை கடந்த ஒரு வருடமாக நட்பாக பழகி வருகிறது.
    • ஆரிப் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அந்த நாரை அவரை பின் தொடர்ந்து பறந்து செல்கிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபருடன் ஒரு நாரை கடந்த ஒரு வருடமாக நட்பாக பழகி வருகிறது. அவர் செல்லும் இடங்களுக்கு கூடவே பறந்து செல்கிறது. அந்த வாலிபரின் பெயர் முகமது ஆரிப். உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு நாரை பறவை ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு காலில் காயத்துடன் சாலையோரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    உடனே ஆரிப் அந்த நாரையை மீட்டு அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நாரையின் காலில் இருந்த காயம் குணமாகும் வரை அதை தனது வீட்டிலேயே வைத்து உணவளித்து வந்தார்.

    நாரையின் காயம் குணமடைந்தவுடன் அதை வெளியில் கொண்டு சென்று பறக்கவிட்டார். அது எங்கும் பறந்து செல்லவில்லை. ஆரிப்புடனேயே தங்கி விட்டது. அத்துடன் அந்த நாரை ஆரிப்புடன் மிகவும் நட்புணர்வுடன் நெருக்கமாக பழகி வருகிறது. கடந்த ஒரு வருடமாகவே இந்த பாசப்பிணைப்பு தொடருகிறது.

    ஆரிப் வீட்டில் அவரது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அந்த நாரையும் ஒரு குடும்ப உறுப்பினராகவே வசித்து வருகிறது. அந்த குடும்பத்தினரும் நாரையை பாசமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையே ஆரிப் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அந்த நாரை அவரை பின் தொடர்ந்து பறந்து செல்கிறது. சாலைகள், வயல் வெளி, வீடு என ஆரிப் செல்லும் இடங்களில் எல்லாம் அந்த நாரை அவரை நிழல்போல தொடருகிறது. அந்த அளவுக்கு ஆரிப்புக்கும், அந்த நாரைக்கும் நட்புணர்வு உள்ளது.

    ஆரிப்புடன், நாரை பறந்து செல்லும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பறவையின் நட்புணர்வை பாராட்டி வருகிறார்கள்.

    • விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
    • குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள் ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

    லக்னோவில் உள்ள மாடல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    • உமேஷ்பால் வெளியில் சென்று விட்டு பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார்.
    • போலீசார் மர்ம கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூபால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ்பால். இவரது உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

    அவர் எங்கு சென்றாலும் 2 பாதுகாவலர்கள் உடன் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை உமேஷ்பால் வெளியில் சென்று விட்டு பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார். அவர் காரை விட்டு இறங்கியதும் பின்னால் இருந்து ஓடி வந்த மர்மநபர்கள் அவர் மீது முதலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள்.

    பின்னர் துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் உமேஷ்பால் கீழே சரிந்தார். இதை பார்த்த அவருடன் வந்த 2 பாதுகாவலர்களும் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். இதனால் அந்த கும்பல் போலீசார் மீதும் துப்பாக்கியால் சுட்டது. இதில் 2 போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த உமேஷ்பால் மற்றும் 2 பாதுகாவலர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உமேஷ்பால் இறந்தார். 2 போலீசாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த கொலை காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் மர்ம கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
    • கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2 பெண்களும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வாரணாசி அருகே உள்ள பல்வாகி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2 பெண்களும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் துண்டு பிரசுரங்கள் கொடுத்து இந்துக்களிடம் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து அந்த கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார்.

    • ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கிராம மக்கள் திரண்டு வந்து கூண்டுக்குள் சிறுத்தை சிக்கி கொண்டதா? என்று பார்ப்பது வழக்கம்.
    • சம்பவத்தன்றும் பொதுமக்கள் அங்கு சென்ற போது கூண்டுக்குள் வாலிபர் ஒருவர் அழுதுகொண்டிருப்பதை பார்த்தனர்.

    லக்னோ:

    காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்தால் அவற்றை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் சிறுத்தை போன்ற பயங்கர விலங்குகள் ஊருக்குள் வந்தால் அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க ரகசிய கேமிராக்கள் அமைத்து சிறுத்தை எங்கெங்கு செல்கிறது என்பதை கண்டுபிடிப்பார்கள்.

    பின்னர் அந்த பகுதியில் கூண்டுகள் அமைத்து அதனை பிடிக்க ஏற்பாடு செய்வார்கள். இதுபோல உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, புலந்த்ஷாகர் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் புலந்த்ஷாகர் கிராமத்துக்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் ஆங்காங்கே கூண்டுகளும் அமைத்தனர்.

    ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கிராம மக்கள் திரண்டு வந்து கூண்டுக்குள் சிறுத்தை சிக்கி கொண்டதா? என்று பார்ப்பது வழக்கம். சம்பவத்தன்றும் பொதுமக்கள் அங்கு சென்ற போது கூண்டுக்குள் வாலிபர் ஒருவர் அழுதுகொண்டிருப்பதை பார்த்தனர்.

    அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தெரிவிக்க, அங்கிருந்து ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கூண்டை திறந்து வாலிபரை மீட்டனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் கூண்டுக்குள் சிக்கியது எப்படி? என்று கேட்டனர். அதற்கு அவர் நேற்றிரவு அந்த பகுதியில் கோழி ஒன்று நின்றது. அதனை நைசாக பிடிக்க சென்றேன். அந்த கோழி கூண்டுக்குள் ஓடியது.

    நானும் கூண்டுக்குள் சென்று கோழியை பிடிக்க முயன்றேன். ஆனால் கோழி தப்பி விட்டது. நான் மட்டும் கூண்டுக்குள் சிக்கி கொண்டேன் என்று கூறினார்.

    இதனை கேட்டு வனத்துறையினரும், கிராம மக்களும் வாய்விட்டு சிரித்தனர். கோழி பிடிக்க போய் இப்படி மாட்டி கொண்டாயே என்று சிலர் கிண்டல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த நிகழ்வுகளை அங்கு நின்ற சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ×